சென்னை. ஏப். 28- தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலா ளர் ஹர்மந்தர் சிங் வெளியிட்ட அரசாணையில் கூறப் பட்டு இருப்பதாவது:-
கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை செய்திக் குறிப் பாக வெளியிட்டார். அதில், “உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்ட ணம் போன்றவற்றை செலுத் துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு, அதாவது வரும் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் முன்மொழிவு ஒன்றை அனுப்பினார்.
நடப்பு நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதியோடு முடிந்து விட்டது. கரோனா தொடர் பான ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள், இந்திய ரிசர்வ் வங்கி போன்றவை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித் துள்ளன. கடன் தவணை களை செலுத்த 3 மாதம் அவ காசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற் றும் பாக்கிகளை செலுத்து வதை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் தண்டனை வட்டி வசூலிக்கக் கூடாது என்றும் பலதரப்பு மக்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இதுதொடர்பாக தகுந்த உத்தரவை அரசு வெளியிட வேண்டும் என்று நகராட்சி நிர்வாக ஆணையர் வேண்டுகோள் விடுத்துள் ளார். அவரது இந்த கோரிக் கையை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது.
அதன்படி, அனைத்து மாநகராட்சிகள் நகராட்சி கள், பேரூராட்சிகளில் வரி, பாக்கிகள் செலுத்துவது, வர்த்தக உரிமம் புதுப்பிப்பது ஆகியவை எந்தவொரு அப ராதமும் வசூலிக்காமல் வரும் ஜூன் 30-ஆம் தேதிவரை தள் ளிவைக்க அரசு உத்தரவிடு கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment