ஒற்றுமையாக போராடுங்கள்: பிரதமர் மோடி
புதுடில்லி, ஏப். 20- கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் 40 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிக ரித்த வண்ணம் உள்ளன.
இந்தியாவில் நேற்று (ஏப். 19) மாலைவரை கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர் களின் எண்ணிக்கை 16,116-ஆக அதிகரித்துள்ளது. 2,301 பேர் குணமடைந்துள்ளனர். 519 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டாலும் நோயின் வீரியத்தை அறியாமல் சிலர் கட்டுப்பாட்டை மீறுகின்ற னர். இதனால் அதிகாரிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில் மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி சுட்டுரைப் பதிவில், ‘‘கரோனா தாக்குவதற்கு முன் இனம், மொழி மதம், நியம், சாதி, மதம் பார்க்காது. நம் முடைய பதில்கள், நடத்தை ஆகியவை ஒருங்கிணைப்பு மற்றும் சகோதரத்துவத்தை முதன்மையாக கொண்டதா கவே இருக்க வேண்டும். நாம் இதில் ஒன்றாக இணைந்திருக் கிறோம்’’ என்று பதிவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment