ஊரடங்கால் இந்தியாவில் ஏற்பட்டு உள்ள மாற்றம் நாசா செயற்கை கோள் படம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 23, 2020

ஊரடங்கால் இந்தியாவில் ஏற்பட்டு உள்ள மாற்றம் நாசா செயற்கை கோள் படம்


புதுடில்லி, ஏப். 23- இந்தியாவில் ஊரடங் கால் காற்று மாசு வெகுவாக குறைந் துள்ளதாக நாசா அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. வட இந்தியாவில் ஊரடங்கின்போது நாசா செயற்கைக் கோள் சென்சார்கள்  இந்த ஆண்டுக் கான 20 ஆண்டு குறைந்த அளவில் காற்று மாசு (ஏரோசோல்) அளவை படம் பிடித்து உள்ளன. நாசா விண் வெளி ஆராய்ச்சி மய்யத்தின் செயற் கைக்கோள், மார்ச் 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு இடையில் படம்பிடித்துள்ள புகைப்படத்தில் வட இந்தியாவில் காணப்படும் காற்று மாசின்(ஏரோசோல்)  அளவு இதுவரை காணப்படாத அளவிற்குக் குறைந்துள் ளது என்று பதிவாகியுள்ளது.


கடந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத மிகக் குறைந்த அளவு காற்றுமாசு மதிப்பீடு இந்த ஆண்டு தான் பதிவாகியுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.


காற்று மாசு (ஏரோசோல்கள்) இயற்கையாக உருவாகும் ஏரோ சோல்கள் என்று ஒரு வகையும், மற் றொன்று மனிதனால் உருவாக்கப்படும் ஏரோசோல்கள் என்று மொத்தம் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள் ளது. இயற்கையில் உருவாகும் தூசி புயல்கள், எரிமலை வெடிப்புகள் மற் றும் காட்டுத் தீ போன்ற இயற்கை ஆதாரங்கள் ஒரு வகை ஏரோசோல் களை வெளியிடுகின்றன.


அதேபோல், புதை படிவ எரி பொருள்கள் மற்றும் பயிர்நிலங்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கை களிலிருந்து வெளிவரும் ஏரோசோல் கள் காற்றை மாசுபடுத்துகிறது. முக்கி யமாக புதைபடிவ எரிமம் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரோ சோல்கள் தான் மனித வளத்தின் ஆரோக்கியத்தைச் சேதப்படுத்தும் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது என்கிறது ஆய்வாளர்களின் அறிக்கை.


பொதுவாக, வசந்த காலத்தின் துவக்கத்தில், வட இந்தியாவின் கங்கை பள்ளத்தாக்கில், மனித நடவடிக்கை கள் தான் ஏரோசோல்களின் பெரும் பகுதியை உருவாக்குகின்றன. அதுமட் டுமின்றி, அப்பகுதியில் உள்ள தொழிற் சாலைகள், நிலக்கரி எரியும் மின் உற் பத்தி நிலையங்கள், வாகனங்களிலி ருந்து வெளியேறும் நைட்ரேட்டுகள், சல்பேட்டுகள் மற்றும் பிற கார்பன் நிறைந்த துகள்களை இந்த பகுத்து பெருமளவில் உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மய்யத்தின் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் (யுஎஸ்ஆர்ஏ) ஆராய்ச்சியாளர் பவன் குப்தா கூறும்போது:-


ஊரடங்கின் போது பல இடங் களில் வளிமண்டல அமைப்பில் மாற் றங்களைக் காண்போம் என்று எங் களுக்குத் தெரியும். ஆனால் இந்த ஆண்டு இந்தோ-கங்கை சமவெளியில் ஏரோசல் மதிப்புகள் மிகக் குறைவாக இருக்குமென்று நான் எதிர்பார்க்க வில்லை, இது நம்பமுடியாத உண்மை யாக உள்ளது என்று கூறி உள்ளார்.


No comments:

Post a Comment