சென்னை,ஏப்.26, அரசின் முழு ஊரடங்கின்போது அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காது என்று தவறாகப் புரிந்துகொண்ட பொதுமக்கள், காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் நேற்று லட்சக்கணக்கில் குவிந்தனர்.
நகரின் பெரும்பாலான மளிகை மற்றும் காய்கறி கடைகளில் நேற்று காலை 6 மணிக்கே மக்கள்நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.பெரும்பாலான இடங் களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இதன் காரணமாக பல காய்கறி கடைகளில் காலை 9 மணிக்கே அனைத்து பொருட்களும் விற்றுத் தீர்ந்தன. அனைத்து கடைகளிலும் முட்டை, ரொட்டி போன்றவை காலை 8 மணிக்கே விற்று தீர்ந்துவிட்டன. எண்ணெய், பருப்பு வகைகள், கோதுமை, கம்பு, கடலை போன்ற மாவு வகைகள் உள்ளிட்டவை காலை 10 மணிக்குகாலியாகிவிட்டன.
பொதுமக்களில் பலர், தாங்கள்விரும்பிய நிறுவ னங்களின் சோப்பு, ஷாம்பு, தேங்காய் எண்ணெய் வகைகள் கிடைக்காத நிலையில், கிடைத்த பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இதற்கிடையே, பொதுமக்களின் வசதிக்காக மளிகை மற்றும் காய்கறி விற்பனை நேரத்தைநீட்டிக்க வேண்டும் என்று திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை 3 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். மாலை3 மணி வரை கடைகள் திறந்திருந்தாலும், தாங்கள் விரும்பிய பொருட்கள் கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற் றத்துடன் திரும்பிச் சென்றனர்.
No comments:
Post a Comment