நோபல் பரிசு பெற்ற அறிஞர் அதிர்ச்சித் தகவல்
லண்டன், ஏப்.20 சீனாவின் வூகான் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால்தான் கரோனா வைரஸ் உற்பத்தி செய்யப் பட்டதாக நோபல் பரிசு பெற்ற நுண் கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன் தக்னேர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகிற கரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? அல்லது இயற்கை யாகவே உருவானதா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதற்கிடையில் சீனாவின் மத்திய நகரமான வூகானிலுள்ள கடல்வாழ் உயிரி னங்கள் விற்பனைச் சந்தையில் இருந்து உருவானது என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்கள் வெளி உலகுக்கு வரத் தொடங் கியதும் அந்த சந்தையும் மூடப்பட்டது.
இந்நிலையில், கரோனா வைரஸ் இயற்கையானது அல்ல; சீனாவில் வூகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடி யூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட் டது. அது அங்கிருந்து தப்பித்து வந் துள்ளது என்று அமெரிக் காவின் பாக்ஸ் நியூஸ் டெலிவிஷன் நிறுவனம் செய்தியை வெளியிட்டு, உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அமெரிக்கா விரி வான விசாரணை நடத்தி வருவதாகவும் அது தெரிவித்தது.
இந்நிலையில், உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரை மருத்துவமனையில் கிடக்கச் செய்துள்ள இந்த கொடிய வைரஸ் குறித்த குழப்பமும் சந்தேகமும் பல்வேறு நாடுகளிடம் எழுந்துள்ள நிலை யில் எய்ட்ஸ் நோய்க் குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கரோனா நுண்கிருமி மனிதர்களால் செயற்கையாகப் படைக்கப்பட்டு பரவியதாக பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் தெ வித்துள்ளார்.
எய்ட்ஸ் கிருமி தொடர்பான ஆய்வக 2008ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவ ரான அவர் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வூகான் தேசிய பயோ சேப்டி ஆய்வுக் கூடத்தில் தற்செயலாக நிகழ்ந்த விபத்தின் காரணமாகவே கரோனா பரவியிருப்ப தாகவும் இரண் டாயிரமாண்டு ஆரம்பம் முதலே சீனா இத்தகைய கரோனா வைரசுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித் துள்ளார்.
மேலும் கரோனா வைரஸ் காட்டு விலங்குகளிடமிருந்து வூகான் சந் தைக்குச் சென்றதாக தான் நம்பவில்லை என்று குறிப்பிட்டார். இது ஒரு நல்ல புராணக் கதை, அது சாத்தியமற்றது என்று கூறினார்.
No comments:
Post a Comment