எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு பணி வான வணக்கம், பொருள்: கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றி தர வேண்டி கோரிக்கை மனு: நாங்கள் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் 2400 ஊழியர்கள் அரசு மருத்துவ மனைகளில் ஒப்பந்த ஊழியர்களாகபணிபுரிந்து வருகிறோம்.
தமிழகம் முழுவதும் கரோனா கிருமித்தொற்றின் அச்சம் மக்களிடையே பெரும் பீதியையும், மனரீதியான உளவியல் சிக்கல்களையும் உருவாக்கி வருகிறது.
இந்நிலையில்,மாவட்டம்தோறும் கோவிட் 19 கட்டுப்பாட்டு உதவி மய்யங்கள் 24 மணி நேரமும் முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. உதவி மையத்தை நாடுவோர்களில் பெரும் பாலானோர் மனக்குழப்பம் மற்றும் மன அழுத் தத்தில் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களை ஆற்றுப்படுத்திசுயவிழிப்புணர்வு அடையச்செய்யும் பணியை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் 10 வருடங் களுக்கும் மேலாக அனுபவம் மிக்க 700 ஆற் றுனர்களை தமிழக அரசு இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறது. மேலும் ஆய்வக நுட்புநர்கள் வெளிநாடு சென்று வந்தவர்கள் மற்றும் கரோனா அறிகுறி உள்ளவர்கள் என அனை வருக்கும் இரத்த பரிசோதனைக்கு இரத்தம் சேகரிப்பு செய்யும் பணியும், நீரத்திவலை (swap collection) சேகரிப்பு பரிசோதனை செய்யவும் பயிற்சி கொடுக்கப்பட்டு, தற்போது அப்பணியினை செய்துவருகின்றனர்.
இதுபோன்ற பேரிடர் காலங்களில் ஆற்று னரின் முக்கியத்துவம் உணர்ந்து அவர்களை ஈடுபடுத்துவது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாடு அரசு எடுத்து வரும் கரோனா தொற்றுநோய் நடவடிக்கைகள் அனைத்திலும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறோம்.
ஆனால் நாங்கள் ஒப்பந்த பணியாளர்கள் என்பதால் தமிழக அரசு அறிவித்துள்ளபடி மருத்துவ காப்பீடு, ஊக்கதொகை உள்ளிட்ட அடிப்படை சலுகைகள் கிடைக்குமா? என்ற அச்சம் எய்ட்ஸ்க ட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களிடையே நிலவி வருகிறது. எனவே எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பாக தங்களிடம் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து...
தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1) கரோனாதொற்றுநோய் தடுப்பு பணியில் ஈடுபடும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழி யர்களுக்கு இரண்டு மாத ஊதியத்தை பேரிடர் கால சிறப்பு ஊதியமாக வழங்கிட தமிழக அரசைவலியுறுத்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2) தமிழக அரசு அறிவித்துள்ளப்படி கரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டிருக்கும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களுக்கும் மருத்துவகாப்பீடுரூ.50,00,000 வழங்கிட தமிழக அரசை வலியுறுத்திட அன் புடன் கேட்டுக்கொள்கிறோம்.
3)கரோனாதொற்றுநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் போதுமான அளவு தொற்றுநோய் தடுப்பு உபகரணங்களை வழங்கிட தமிழக அரசை வலியுறுத்திட அன் புடன் கேட்டுகொள்கிறோம்.
நன்றி. அன்புடன்,
மா.சேரலாதன் மாநில பொதுச்செயலாளர்,
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கம்.
தொடர்புக்கு:9245363755
No comments:
Post a Comment