மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர் தாயார் கரோனாவால் உயிரிழந்தார் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 24, 2020

மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர் தாயார் கரோனாவால் உயிரிழந்தார் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை


மதுரை, ஏப்.24 மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகரின் தாய்க்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கோயில் ஊழி யர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் அனைவருக்கும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக ‘கரோனா’ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.


மதுரையில் நேற்று முன்தினம் வரை 50 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட் டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். 27 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை இந்த நோய்க்கு பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் டெல்லி நிகழ்வுக்கு சென்று வந்தவர்களுக்கும், அவர் களிடம், தொடர்பு இருப்ப வர்களிடம் மட்டுமே இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகரின் 72 வயது தாயிக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. அதனால், அர்ச் சகர் குடும்பத்தினர், கோயில் ஊழியர்கள், கோயில் பாது காப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் அனை வரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப் படுத்தி ‘கரோனா’ பரிசோ தனை செய்ய சுகா தாரத்துறை முடிவு செய்துள்ளது. அர்ச் சகர் தாய் ஊரடங்குக்கு பிறகு வெளியே செல்லவே இல்லை.


அர்ச்சகர் வீட்டிற்கு தின மும் வெளியே இருந்து ஒரு வேலையாள் வேலைக்கு வரு வதாகவும், தற்போது அவரை யும் இந்த பரிசோதனைக்கு உடப்படுத்தப்பட உள்ளனர்.


கோயில் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அர்ச்சகரின் தாய்க்குதான் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ஊழியர்கள் அனை வரையும் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்,’’ என்று தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட் டிருந்தது.


இந்நிலையில்  மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையில் உள்ள கரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டி ருந்த அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது நேற்று வெளியான மருத்துவ அறிக்கை யில் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வந்த அவர் இன்று காலை  (24.4.2020) உயிரிழந் தாக தகவல் வெளியாகி யுள்ளது.


No comments:

Post a Comment