கோடையில் இருந்து தப்பித்தாலும் குளிர்காலத்தில் அச்சம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 18, 2020

கோடையில் இருந்து தப்பித்தாலும் குளிர்காலத்தில் அச்சம்


நவம்பரில் 2ஆவது கரோனா அலை எழும்பும் உலக நாடுகளுக்கு சீனாவின் கரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழு எச்சரிக்கை


பெய்ஜிங்,ஏப்.18, கோடைக்காலத் தில் இருந்து தப்பித்தாலும் குளிர் காலமான நவம்பரில் 2ஆவது கரோனா அலை சீனா உட்பட உலக நாடுகளில் எழும்பும் என்று, உலக நாடுகளுக்கு சீன கரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழு எச்சரித்துள்ளது.


சீனாவின்ஷாங்காயில்கரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழுவின் தலைவரும், கிழக்குபெருநகர நகரத் தின் உயர்மட்ட மருத்துவமனை களில் ஒன்றில்தொற்றுநோய்த்துறை நிபுணருமாகிய ஜாங் வென்ஹோங் கூறியதாவது: உலகெங்கிலும் உள்ள நாடுகள் கோடை காலத்தில் கரோனா தொற்றுநோயை போது மான அளவிற்குகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.


ஆனால், வரவிருக்கும் குளிர்காலத்தில் (நவம் பர் டிசம்பர்) கரோனா வைரஸ் இரண்டாவது தாக்குதல் அலையை ஏற்படுத்தும். சீனாவின் பிற இடங் களில் தொற்றுநோய்கள் பரவல் இன்னும் இருக்கிறது. கரோனாவை கட்டுப்படுத்திய சீனாவின் அனு பவம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் தான் தெரியும். இருந்தாலும், வைரசின் ஆரம்பபரவலைக்கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் செய்யத் தேவையில்லை.


சீன அரசு எந்தவொரு பணிகளையும் நிறுத்தாது. வெளிப் பகுதியில் இருந்து வந்த கரோனா பரவில் நிச்சயமாக மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும். தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தளர்வு ஆகியன சாதா ரணமாகவாழ்வதற்கு வழிவகுக்கும். ஆனால்பாதிப்புகளை முற்றிலுமாக ஒழிக்க முடியாது. ஆரம்பகால உள் நாட்டுபாதிப்புகள் உச்சம் அடைந்த பின்னரும், நாடுகள் தொடர்ந்து தொற்றுநோயை எதிர்த்துப்போராட வேண்டும்.


அதன்படி எல்லா நாடு களும் நோயை முறையாகக்கட்டுப் படுத்திய பின்னரே, அனைவரும் மீண்டும் நன்றாக வாழ முடியும். தொற்று நோய்ப் பரவலை கண்டு பிடித்து சோதனைமற்றும்தொடர்பு தடமறிதல், உறுதிப்படுத்தப்பட்டபாதிப்புகளை உடனடியாக மருத் துவமனையில் சேர்ப்பது ஆகியன தான், தொற்றுநோய் கட்டுப்பாட் டுக்கான ரகசியம். வருகிறமேமாதத்திற்குள் அமெ ரிக்கா தனது பாதிப்பை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரும். அமெரிக்காவும், சீனாவும் தொற்றுநோய் தடுப்புக்கு இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும்.


மருத்துவ மட்டத்தில் எங்களுக்கிடையில் தொடர்பு ஒருபோதும் நிறுத்தப் படவில்லை. சீனாவை பொறுத்த வரை பொருளாதாரத்தை புதுப் பிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக சீன அதிகாரிகள் படிப் படியாக தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின் றனர். சீனாவில் உறுதிப்படுத்தப் பட்ட கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 82,341 அய் எட்டியுள்ளது.


மொத்தம் 3,342 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். வூஹானின் மய்யப்பகுதியான கரோனா வைரஸ் பரவல் தடுக்கப் பட்டாலும்கூட, புதிய பாதிப்புகள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து திரும்பும் சீன நாட்டவர்களிடமி ருந்து தொடர்ந்து வருகிறது. இவ் வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment