புதுடில்லி, ஏப்.19 நாளை முதல் முக்கிய தொழிற் கூடங்கள் இயங்குவது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தீவிர மாக உள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் 500- அய் எட்டுகிறது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற் கான அறிவிப்பை பிரதமர் மோடி அண்மையில் வெளியிட்டார்.
அப்போது, அவர் கரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் வருகிற 20- ஆம் தேதி முதல் நிபந்தனையுடன் சில தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் டுவிட்டரில்...
இந்த நிலையில் 20- ஆம் தேதி (நாளை) முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவச் சேவை கள் செயல்படும்.
வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.
மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.
தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல் படலாம்.
நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொட ரும். இதில் ஊழியர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
பொது விநியோகத்துறை செயல்படும்.
மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு அனுமதி.
ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலை தூரக் கல்விக்கு அனுமதி.
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய லாம்.
வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப் பாடுகளுடன் இயங்கலாம்.
கட்டட தொழில்களைத் தொடர அனுமதி.
தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்காக இயக்கலாம்.
அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.
இந்த அறிவிப்புகள் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்குப் பொருந்தாது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment