சென்னை, ஏப். 20- இணைய வழியில் மின்சார இருசக்கர வாகனங்களை பதிவு செய் தால் சிறப்பு சலுகைகள் வழங் கப்படும் என ஹுரோ நிறு வனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு வாகன உற்பத்தி நிறுவனமாக ஹுரோ விளங் குகிறது. இப்போது இணைய தள வழி விற்பனைக்கான சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தச் சலுகை யானது ஏப்ரல் 17 முதல் மே 15 வரையிலான குறுகிய கால கட்டத்தில் மட்டுமே நடை முறையில் இருக்கும். இந்த முன்பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.2,999 ஆகும். ஏற்கெனவே வாடிக்கையா ளர்களாக இருப்போர், புதிய வாடிக்கையாளர்களை ஊக் கப்படுத்தும் போது அவர் களுக்கு ஆயிரம் ரூபாய் அளிக் கப்படும். ஜூன் மாதத்துக்குப் பிறகும் ஊரடங்கு தொடர்ந் தால் மட்டுமே முன்பதிவுத் தொகையை திரும்பப் பெற முடியும். ஊரடங்கு முடிந்தவு டன் ஜூன் மாத இறுதிக்குள் எப்போது வேண்டுமானா லும் வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் ஹுரோ மின்சார இருசக்கர எந்த வாகனத்தையும் முன் பதிவு செய்ய முடியும். அப்ப டிச் செய்வோருக்கு உடனடி யாக ரூ.5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும். அதேசமயம், க்ளைடு மற்றும் இ-சைக்கிள் வாகனங்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ.3 ஆயிரம் வரை ரொக்கப் பணம் தள்ளு படி அளிக்கப்படும். இந்த சலு கைத் திட்டமானது இணை யத்தின் வழியே மேற்கொள் ளப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் இப்போதைய சூழ்நிலையில், பொது மக்கள் சமூக இடைவெளியை கடை பிடிப்பதுடன், சுற்றுச்சூழலும் மெதுவாக தன்னை இயல்பு நிலைக்கு மீட்டெடுத்து வரு கிறது என ஹுரோ எலக்ட் ரிக் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சோகிந்தர் ஹில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment