சென்னை, ஏப்.17- பாதிக்கப்படும் மக்க ளுக்குத் தேவையான உதவிகளை, இது வரை செய்ததைப் போலவே தொடர்ந்து தி.மு.க.வினர் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரோனா நோய்த் தொற்றால் ஏராள மானோர் பாதிக்கப்பட்டு அனைவ ருடைய வாழ்வும் செய்வதறியாது ஸ்தம் பித்து நிற்கின்றது. நெருக்கடி மிகுந்த நிலையிலே கூட, அ.தி.மு.க. அரசும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பேரிடரை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, நாகரிக சமுதாயம் சிறிதும் ஏற்கவிய லாதவாறு, அரசியல் செய்து வருவது கண்டு, நடுநிலையாளர்கள் மிகுந்த வேதனை கொண்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு, ஆளுங்கட்சியான அ.தி.மு.க. விற்கு மட்டுமே விதிவிலக்கு மற்றவர்களுக்கு எல்லாம் கட்டாயம் என்று அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஒரு பாரபட்ச அணுகுமுறையுடன் செயல் படுவது, ஜனநாயகத்திற்கே கேடாய் அமைந்திருக்கிறது.
முதல்-அமைச்சர், தலைமை செயலா ளர் ஆலோசனை கூட்டம் நடத்துவதால், யாருக்காவது நோய்த் தொற்று இருந்தால் மற்றவர்களுக்கும் பரவும் என்பது தெரிய வில்லை; மத்திய-மாநில அரசுகளின் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை களுக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை உணரவில்லை. ஆனால், தி.மு.க. அனைத் துக் கட்சிக் கூட்டம் என்று அறிவித்ததும், காரணங்களைச் சுட்டிக்காட்டி, சென்னை மாநகரக் காவல்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்க வைத்து அநாக ரிகமான அரசியலைச் செய்திருக்கிறார் முதல்-அமைச்சர்.
இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற வுடன் கூட்டத்தில் 11 தலைவர்கள் மட் டுமே பங்கேற்பார்கள். பத்திரிக்கையாளர் சந்திப்பு இல்லை. தனிமனித இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகள் அனைத் தும் கூட்ட அரங்கில் கடைப்பிடிக்கப்படும். அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றெல்லாம் தி.மு.க. உறுதியளித்தும், தடை விதிக்கப் பட்டுள்ளது. ஜனநாயகம் மிக வலிமை யானது; இப்படி ஆணவத்திற்கும், அதி கார துஷ்பிரயோகத்திற்கும், பக்குவம் பெறாத அரசியலுக்கும் தக்க தருணத்தில் நிச்சயம் பதிலடி கிடைக்கும்.
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 1 கோடி ரூபாயை தன்னிச்சையாக எடுத்துக் கொள்வது, தி.மு.க.வின் அனைத்து கட்சி கூட்டத்தை தடுப்பது, பாதிக்கப்பட்டோ ருக்கு தி.மு.க. வழங்கும் உணவு மற்றும் நிவாரண உதவிகளை தடை செய்வது எல்லாமே, ஊரடங்கு நேரத்தில் தி.மு.க. ஆற்றி வரும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் மக்கள் பணியை எப்படியாவது தடுக்கும் உள்நோக்கம் கொண்டது. சீர் கெட்ட அந்த நடவடிக்கை கடும் கண்ட னத்திற்குரியது. பேரிடரிலும், பொருளா தார இழப்பிலும் தமிழகம் தடுமாறி கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தி.மு.க., மக்கள் நலன் சார்ந்த பணிகளிலும், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்வதிலும் மட்டுமே முனைப்பு காட்ட வேண்டும் என்றும், எக்காரணம் கொண் டும் திசை திருப்பும், பின்னடைவான எவ்வித காரியத்திலும் அ.தி.மு.க.வைப் போல இறங்கிவிடக்கூடாது என்றும், முடிவு செய்திருக்கிறது.
எனவேதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் நோக்கில், நாளை (இன்று) காணொலி காட்சி மூலம், அனைத்து கட்சித் தலைவர் களுடன் ஆலோசனை நடத்த இருக் கிறேன். ஆகவே, தி.மு.க. மாவட்டக் நிர் வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் அனை வரும் கரோனா நோயின் கொடூரத் தாக்கு தலில் இருந்து தமிழக மக்களைப் பாது காக்கத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகளை, இதுவரை செய்ததைப் போலவே தொடர்ந்து ஆங் காங்கே செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment