புதுடில்லி, ஏப்.17 ஊரடங்கு மட் டுமே கரோனாவுக்கு தீர்வு அல்ல என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி., ராகுல், காணொலி வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
ஊரடங்கால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது. ஊரடங்கு என்பது தற்காலிகமான முடிவுதான். ஊரடங்கு முடியும் போது, கரோனா மீண்டும் பரவத் துவங்கும். அதிகள விலான பரிசோதனை, மட்டுமே கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும். மாநில அரசுகளே கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் சோதனையை வரிவு படுத்த வேண்டும். தற்போதைய பரி சோதனைகள் போதுமானதில்லை.
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். கரோனாவுக்கு எதிரான போராட் டத்தில் நமது முக்கியமான அமைப் புகள் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் செயல்படுகின்றன. கேர ளாவின் வயநாட்டில், கரோனா தடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு, மாவட்ட அளவில், அதி காரிகள் சிறப்பாக பணியாற்றியதே காரணம். எந்தெந்த இடங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது என்பதை கண்டறிந்தால் தான் கரோனாவை தடுக்க முடியும். மாநிலங்கள், மாவட்ட அளவில் கரோனா பரி சோதனை தீவிரப்படுத்த வேண்டும்.
நாம் அவசர சூழ்நிலையில் உள்ளோம். இதனை எதிர்த்து அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும். நாம் திட்ட மிட்டு பணியாற்ற வேண்டும். ஊரடங்கு பிரச்னையை தீர்க்க வில்லை. மாறாக பிரச்சினையை ஒத்திவைத்தது. பிரதமர் மோடி யுடன் பல்வேறு விஷயங்களில் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட் டுள்ளது. தற்போது, நாம் சண்டையிடுவதற்கான நேரம் அல்ல. கரோ னாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து போராடுவோம்.
இவ்வாறு ராகுல் கூறினார்.
No comments:
Post a Comment