திருச்சியில் நிவாரண உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 25, 2020

திருச்சியில் நிவாரண உதவிகள்


 திருச்சி, ஏப்-25, கரோனா வைரஸ் பரவலை ஒட்டி அரசு அறிவித்துள்ள ஊர் டங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயேமுடங்கவேண் டிய சூழ்நிலை ஏற்பட் டுள்ளது இதனால் பொரு ளாதாரத்தை இழந்து அன் றாடம் உணவுக்கே கஷ்டப் படுகிற மக்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின்படி தமி ழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கழகப் பொறுப்பாளர்கள் உதவி களை செய்துவருகின்றனர்


அதன் ஒரு பகுதியாக திருச்சியில் மாநில தொழிலாளர் அணி செயலாளர் சேகர் முயற்சியில் கழகத் தோழர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் திராவிடர் தொழிலாளர் அணியும், திருச்சி 19 வார்டு திமுகவும் இணைந்து ஜெயில் பேட்டை பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி வழங்கினர்.


திருச்சி மாநகரத் தலைவர் மருதை அரிசி வழங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். மேலும் திமுக 19வது வார்டு செயலாளர் வழக்குரைஞர் நலங்கிள்ளிஜெயில்பேட்டை பகுதியை சேர்ந்த கழகப்பொறுப்பாளர்கள் தமிழ்மணி, சங்கீதா ,சேவியர், மணிமாறன் சகாயமேரி, மரியம்மேரி, கிளாரா, ராஜேஷ்கண்ணா , பழனிச்சாமி,மேரிசுசிலா, வசந்தி, மஸ்தான் நாயகம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment