கோவை, ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோபி மற்றும் தாராபுரம்கழக மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகக் காணொலிக் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 29, 2020

கோவை, ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோபி மற்றும் தாராபுரம்கழக மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகக் காணொலிக் கலந்துரையாடல் கூட்டம்


கோவை, ஏப்.29, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்திலும் பகுத்தறிவாளர்கள் தொய்வின்றிக் கடமை யாற்ற வேண்டும் என்று பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, 24.4.2020 அன்று முற் பகல்  11 மணி அளவில் கோவை, ஈரோடு, திருப் பூர், மேட்டுப்பாளையம், கோபி மற்றும் தாரா புரம் கழக மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாநில துணைத் தலைவர் தரும. வீரமணி தலைமை யில் காணொலி மூலம் நடத்தப் பெற்றது.


கலந்துரையாடல் கூட்டத்தில்  திராவிடர் கழக மாநில பொருளாளர் வீ.குமரேசன் ,பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, பொதுச்செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்கள் அ.தா.சண்முக சுந்தரம், கு.ரஞ்சித்குமார், கா.நல்லதம்பி, கே.டி.சி. குருசாமி, அண்ணா.சரவணன், பகுத் தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் வா.தமிழ் பிரபாகரன், மாவட்டப் பொறுப்பாளர்கள் கோவை வழக்குரைஞர் பெ.சின்னசாமி, அக்ரி.நாகராஜ், திருப்பூர் கோபி.குமாரராசா, கோபிச்செட்டிப்பாளையம் ஆசிரியர் மா.த.குப்புசாமி, கருப்பண்ணசாமி, தாராபுரம் ஆசிரியர் வி.கலையரசன்,ஈரோடு பி.என்.எம். பெரியசாமி,  மேட்டுப்பாளையம் கே.எஸ்.ரங்க சாமி,  தருமபுரி கதிர், செந்தில்குமார், திருப்பத் தூர் சி.தமிழ்ச்செல்வன் ஆகியோர் காணொலி கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.


திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் சிறப்புரையாற்றியாற்றினார். அவர் உரையில், இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் தோழர்கள் வீட்டிலிருந்தப்படியே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தந்தை பெரியார் கொள் கைகளை இணையம் வழியாக பரப்புரை செய்யவேண்டுமெனவும், புத்தகங்களை அதிகம் படிப்பதைக் காட்டிலும் ஆழமாகப் படிப்பதே சிறந்தது எனவும், புத்தக தினத்தை முன்னிட்டு, மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டங்களிலுள்ள இயக்கத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள் மற்றும் நமது ஆதரவாளர்களை 50 விழுக்காடு தள்ளு படியில் நமது இயக்க வெளியீடுகளை வாங் குவதற்காண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக மாநில துணைத் தலைவர் தரும.வீரமணி நன்றி கூற கலந் துரையாடல் கூட்டம் இனிதே நிறைவுற்றது.


 


No comments:

Post a Comment