நாந்து தென் வலது டை துருக்கி நாட்டின் தற்போதைய அதிபர் ரிசப் தாயிப் எர்டோகன். 2014 முதல் இந்த பதவியில் உள்ளார். இதற்கு முன்னர் 2003 முதல் 2014 வரை அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தவர். நாடாளு மன்ற அதிகாரத்தை விட ஜனாதிபதிக்கே அனைத்து அதிகாரம் என மாற்றியவர்.
துருக்கி நாட்டில் 2016, ஜூலை 15 அன்று இரவு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதி, ஒரு திட்டமிட்ட நாடகம்; தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும், ஜனாதிபதி முறையை சட்டபூர்வமாக்குவதற்கும் அதிபர் எர்டோகன் செய்த ஏற்பாடு என்பதை ஒரு நாட்டை இழப்பது எப்படி? (How to lose acountry?) எனும் ஆங்கில நூல் வழியே விவரிக்கிறார் துருக்கி நாட்டின் சிறந்த எழுத்தாளர் ஏ.ச.டெமெல் குரன். ஒரே இரவில் ஜனநாயகம் காணாமல் போய் விடாது. வலதுசாரி ஜனரஞ்சக தேசியவாதம், ஒரு படையெடுப்பைப் போல வீறுநடை போட்டு, அணி வகுத்து வந்து அரசைக் கைப்பற்றும் என்று நாம் ஏமாறக்கூடாது... அது மெல்லத் தவழ்ந்து தான் முன்னேறும். இதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது என்று இந்நூலின் மூலம் உணர்ச்சிமிகு வேண்டு கோளையும் எச்சரிக்கையையும் விடுக்கிறார் 47 வயதான அம்மையார் டெமல்குரன். கிழக்கு அய்ரோபாவிலிருந்து தென் அமெரிக்கா வரை உலகெங்கும் முளைத்துவரும் வலதுசாரி தேசியவாதத்தின் ஆரம்ப அறிகுறிகளை அடை யாளம் கண்டு, இதன் பொதுவடிவத்தை வரையறுப் பதோடு, இந்த ஆபத்தை வேரறுப்பதற்கான கருவிக மக்ககிறார் நூலாசிரியர் ஏ.செ. டெமல்குரன்.
தனது முன்னுரையில், நூல் எழுதியதன் நோக் கத்தை மிகச் சிறப்பாக விளக்குகிறார் எழுத்தாளர் றார் எழுத்தாளர் டெமெல்குரன். "துருக்கியில் ஜனநாயகம் வீழ்ச்சியடைவதை நான் கண்டேன், இது குறித்து அமெரிக்கா, அய்ரோப் பிய நாடுகள் மற்றும் பிரிட்டனை எச்சரிக்க முயற்சித்இ தேன். டிரம்ப் அல்லது எர்டோகன் நாளை வீழ்த்தப் பட்டாலும், அல்லது நைகல் ஃபரேஜ் (பிரிட்டன் அரசியல் தலைவர்) ஒருபோதும் மக்கள் கருத்தின் தலைவராக மாறாவிட்டாலும் பரவாயில்லை. அவர் களின் செய்தியால் தூண்டப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் இன்னும் இருப்பார்கள், இதேபோன்ற நபர்களின் உத்தரவின் பேரில் செயல்பட இன்னும் தயாராக இருப்பார்கள்.
அரசியல் உயர் அதிகாரத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நெறிகள் கீழ் நோக்கி பன்மடங்கு பெருகி, உங்கள் ஊருக்குள், உங்கள் பாதுகாக்கப்பட்ட குடியிருப்புகளிலும் ஊடுருவுகின்றன. வலதுசாரிஜனரஞ்சகம் என்பது வளர்ந்து வரும் உலகளாவிய இயக்கமாகும். அந்நாட்டின் அமைப்பு முறை எவ்வளவு வலுவானதாக இருப்பினும் அல் லது அதன் ஜனநாயகம் எவ்வளவு முதிர்ச்சியடைந் தாக இருப்பினும், வலதுசாரி ஜனரஞ்சகம் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியாகவே செயல்படுகிறது. சர்வாதிகாரத்தின் புற்றுநோய் சமூகத்தின் நரம்பு கள் மற்றும் உறுப்புகளுக்குள் நுழைந்தவுடன், வெளி யேறுவது எளிதல்ல - அரசியல் வழிமுறைகளை முடக்குவதற்கும் அடிப்படை மனித தர்க்கத்தை நோய் சமூகபடுகிறது.
5. குடிமகனைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்திடுவது. 6. துன்பத்தைக்கண்டு போராடாமல், நகைத்திடும் நிலையை உருவாக்குவது 7. அவர்களுக்கான நாட்டை உருவாக்குவது. என ஏழு பகுதிகளாகத் தனது நூலில் தலைப்பிட்டு விவரிக்கிறார். சர்வாதிகாரிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த வழிமுறைக ளைப் பின்பற்றுவது எளிதானது. அதே போன்று, இத்தகைய எச்சரிக்கை அறிகுறிகளைப் புரிந்து கொள்ள கற்றுக் கொள்ளாவிட்டால், சர்வாதிகாரி களை எதிர்ப்பவர்கள் இம்மாற்றங்களை தவறவிடுவ தும் எளிதானது.
நம்மிடம் இருந்து மாறுபட்ட குறிப்புகளோடும், குறியீடுகளோடும் அடுத்த தலைமுறை வளர உள்ளது இந்த விதிமுறைகளுக்கு இணங்காதவர்கள் விலகி நிற்க நேரிடும் என்ற சூழல் உள்ள நாட்டில் நாம் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்துவமான நிலை மைகளில் கவனம் செலுத்தி நேரத்தை இழக்க முடியாது இந்த நடவடிக்கைகளை எடுக்கும்போது அவற்றை நாம் அடையாளம் காண வேண்டும்; பொதுவான வடிவத்தை வரையறுக்க வேண்டும்; ஒன்றுபட்டு, அதை உடைக்க ஒரு வழியைக் கண்டறிய வேண்டும் என்பதை இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது. 'நம் நாட்டை நாம் இழக்கிறோமோ?' என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறார்
நாலாசிரியர் டெமெல்குரான். “இதேபோன்ற சமூக மற்றும் அரசியல் செயல் முறையை அண்மையில் அனுபவிக்கத் தொடங்கியுள்ள அந்த நாடுகளுக்குக் கூட, இந்த நிகழ்வுகளின் பள்ள அந்த நாடுக சங்கிலி ஏற்கனவே அனுபவிப்பதுபோல அல்லது பயன்பாட்டில் இருப்பது போலத் (Cliche) தெரி கிறது” "சமூக நீதி இல்லாவிட்டால் ஜனநாயகம் இல்லை என்பதை மக்களுக்கு நினைவூட்டுவது அரசியல் தத்துவவாதிகளின் வேலையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் 'சமூக நீதி' என்ற வார்த்தையை அரசியல் அகராதி யில் இருந்து நீக்கிய கட்டாய மறதி நோயால் பாதிக் கப்பட்டுள்ளனர்”.
நாலாசிரியர் டெமெல்குரன், பிரிட்டன், அமெ ரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளைக் குறிப்பிட்டு எழுதி உள்ளார். இந்தியாவைப் பற்றி இந்த நூலில் எழுதவில்லை.
எனினும், இந்த நூலில் மேற்குறிப் பிட்ட பகுதிகளைப் படிக்கும் போது இந்தியாவில் பார்ப்பன - உயர்ஜாதியினர்க்கு 10% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அரசியல்கட்சிகளுக்கு சமூக நீதி பற்றிய புரிதல் இல்லாமை நம் நெஞ்சில் எழும். நூலில் கூறப்பட்ட நிகழ்வுகள் நம் நாட்டின் அரசியல் களத்திலும் கண்முன்னே நடப்பது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.
நம்மை நோக்கி பாயும் அந்த தோட்டாவை அடையாளம் காண இந்த நூல் நமக்கு உதவும்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment