ஜெனிவா,ஏப்.19, சீனாவின் வூகான் நகரை முதன் முதலில் தாக்கிய கரோனா, இப்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவியதால் ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் அதிகம் பாதிப்படைந்த வுகான் நகரில் கரோனா வைரசால் உயிரிழப்பு 2,579 ஆக இருந்தது. அந்நாடுமுழுவதும் உயிரிழப்பு எண் ணிக்கை 3,342 என்ற அளவில் இருந்தது. புதிய நோய்த்தொற்றும் வெகுவாக குறைந்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வூகான் நகரில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் நேற்று திருத்தம் செய்யப்பட்டது. வூகான் நகரில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த 2,579 என்ற உயிரிழப்பு எண்ணிக்கை 3,869 ஆக மாற்றம் செய்யப்பட்டது. இது 50 சதவீத உயர்வு ஆகும். ஊர டங்கு காலத்தின்போது மருத்துவ மனைக்கு வெளியே இறந்தவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத் தலின்போது இறந்தவர்களின் பெயர்கள் விடுபட்டதாகவும், அந்த வகையில் வூகான் நகரில் இறந்த வர்களின் பட்டியலில் மேலும் 1,290 பேர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் மொத்தம் 4,632 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக் கப்பட்டது.
கரோனா வைரஸ் பாதிப்பு விஷ யத்தில் சீனா உண்மையை மறைக் கிறதோ? என்ற கருத்துகளும் சந்தே கங்களும் எழுந்தன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் கரோனா வைரஸ் தொழில்நுட்ப அமைப்பை சேர்ந்த மரியா வான் கெர்கோவ் கூறுகையில், கரோனா பாதிப்பு குறித்த தரவுகளில் சீனா திருத்தம் செய்திருப்பது, யாருடைய பெயரும் விடுபடாமல் அனைத்தையும் ஆவ ணப்படுத்தும் முயற்சி. கரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் அனைத்தையும் அடையாளம் காணும் பணி ஒரு சவாலாக உள்ளது. பல நாடுகள் சீனா போன்று இதே சூழ் நிலையில் இருக்கப் போகின்றன என நினைக்கிறேன். எனவே உலக நாடுகள் கரோனா பதிவுகளை மறுஆய்வு செய்து பார்க்க வேண்டும் என்றார்.
உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குநர் மைக்கேல் ரியான் கூறும் போது, அனைத்து நாடுகளும் சீனாவைப் போன்றே செயல்படும். ஆனால், துல்லியமான புள்ளிவிவரங்களை விரைவாக தயாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment