ஈட்டிய விடுப்பு ஊதியம், அகவிலைப்படி உயர்வு ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு: தமிழக அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 28, 2020

ஈட்டிய விடுப்பு ஊதியம், அகவிலைப்படி உயர்வு ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு: தமிழக அரசு

சென்னை, ஏப். 28- தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக் கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   கரோனா வால்  ஈட்டிய விடுப்பு ஊதி யத்தை நிறுத்தி வைத்து தமி ழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என தமிழக அரசின் அரசா ணையில்  தெரிவிக்கப்பட்டுள் ளது.


ஈட்டிய விடுப்பு ஊதியத் துக்கு விண்ணப்பித்திருந் தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும்  உள் ளாட்சி, வாரியம், பல்கலை., கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் ஈட் டிய விடுப்பு ஊதியம் வழங் கப்படுகிறது. ஆண்டு தோறும் அரசு ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்கு ஊதியத்தை பெறு வார்கள்.


தமிழக அரசு ஊழியர்க ளுக்கு  அடுத்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி   வரை அக விலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


மத்திய அரசு ஊழியர்க ளுக்கும் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அக விலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment