கழகத் துணைத் தலைவர் கருத்துரை
காஞ்சிபுரம், ஏப்.28, காஞ்சிபுரம், செங்கற் பட்டு, செய்யாறு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 23.4.2020 அன்று மாலை நான்கு மணிக்கு காணொலி காட்சி வழியாக நடத்தப் பட்டது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் பங்கேற்று வணக்கத்திற்குரிய தமிழர் தலைவரின் அறிக்கைகளை விடுதலை வாயிலாக தவறாது படித்திட வேண்டும் என்றும், அறிவாசான் தந்தை பெரியார் கூட்டங்களில் பேசும்போது பொதுமக்களிடம் கேள்வி கேட்கச் செய்து பதிலுரைத்து பேசிய பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சிறப்பாக எடுத்துரைத்து அனைவருக்கும் உலக புத்தக நாள் வாழ்த்தினை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், தருமபுரி ஊமை.செயராமன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, காஞ்சி மண்டலச் செயலாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன், காஞ்சி மாவட்டச் செயலாளர் இ.இரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி.இளையவேல், மாவட்ட இளைஞரணித் தலைவர் கோவிந்த ராசு, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் அருண்குமார், செங்கற்பட்டு மாவட்டத் தலைவர் செங்கை பூ.சுந்தரம், மாவட்டச் செயலாளர் அ. செம்பியன், பெரியார் பெருந் தொண்டர் பக்தவச்சலம் இராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செய்யாறு தி. காம ராசு, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வடமணப்பாக்கம் வெங்கட் ராமன், மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிவாசன், மண்டல மாணவரணிச் செயலாளர் வெங்க டேசன், சிவக்குமார், மண்டல திராவிடர் கழகத் தலைவர் குடியாத்தம் வி. சடகோபன் ஆகி யோர் பங்கேற்று கலந்துறவாடினார்கள்.
நிறைவாக செய்யாறு மாவட்ட தலைவர் அ. இளங்கோவன் நன்றி கூறினார். நிகழ்வினை மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன் நெறிப்படுத்தினார்.
No comments:
Post a Comment