இந்தக் கட்டுரை எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. ‘SARS-CoV-2’ என்னும், இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், மனிதனால் உருவாக்கப் பட்டதா? இல்லை அது ஓர் இயற்கையின் தெரிவா? போன்ற கேள்விகள் பலருக்கு உண்டு. அதை வைத்துச் சொல்லப்படும் கோட்பாடுகள் மக்களிடையே பெரும் குழப்பத்தையும் உருவாக்குகின்றன. இதற்கு ஒரு முடிவு வேண்டும். அந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சிதான் இந்தக் கட்டுரை.
‘கோவிட் 19’ நோய்க்கான வைரஸ் கள், உயிரியல் ஆயுதம் என்னும் அடிப் படையில் பரிசோதனைச் சாலைகளில் உருவாக்கப்பட்டவை என்றும், வூஹான் மாநிலத்திலிருக்கும் வைரசுக்கான ஆராய்ச்சி நிலையத்தில் சீனாவே உரு வாக்கி, அனைத்து உலகிற்கும் பரவும் படி அனுப்பியது என்றும் சில கோட் பாடுகள் உலா வருகின்றன. ஆனால், உலகின் பெரும்பாலான உயிரியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இரட் டைத் தளம்பல் நிலை இல்லை என்பது தான் இங்கு முக்கியமானது. இந்த வைரஸ் எப்படி உருவானதென்ற அடிப் படை அவர்களுக்குத் தெளிவாகவே தெரிந்திருக்கிறது. அதனாலேயே, பெரும்பாலான அரசுகளும் இதைப் போட்டு அலட்டிக் கொள்ளவில்லை. இதுபோன்ற தேவையற்ற கோட்பாடு களில் நேரத்தைச் செலவிடவில்லை. அவர்களுக்கு முக்கியமானது, கரோனா வைரசை எப்படி அழிப்பது என்ற செயற்பாடுகள் மட்டுமே! ஆனால், இந்தக் கரோனா வைரஸ் எப்படி மனிதர்களிடத்தில் பரவியது என்பதைப் பார்க்கலாம் வாருங்கள்.
‘SARS-CoV-2’ வைரஸ் அதாவது ‘கோவிட் 19’ நோயை உருவாக்கிய வைரஸ், ‘zoonotic’ வகையைச் சேர்ந் தது. விலங்குகளில் உருவாகி மனிதனுக் குப் பரவுவதையே, zoonotic என் கிறார்கள். இப்போது பரவியிருக்கும் கரோனா வைரசும் விலங்கிலிருந்தே மனிதனுக்குப் பரவியிருக்கிறது. அதன் அமினோ அமிலங்களைப் பலவித மரபணுப் பரிசோதனைகளின் மூலம் ஆராய்ந்து இந்த முடிவு எட்டப்பட்டு உள்ளது. அந்த ஆராய்ச்சி எப்படி நடந்தது என்று தொழில்முறையில் விளக்கினால், படிப்பதை நிறுத்திவிட்டு ஓடிவிடுவீர்கள். அதனால், அது தேவை யில்லை. இந்த வைரஸ் விலங்கிலிருந் துதான் தோன்றியது என்றால், அது எந்த விலங்கு என்ற கேள்விக்கும் விடை சொல்ல வேண்டும். அது மிகவும் முக்கியமானது.
பலர் நினைப்பதுபோல, வவ்வால்க ளின் மூலம்தான் இந்த வைரஸ்கள் பரவுகின்றன. ஆனால், யூ ட்டியூப்பில் யாரோ சிலர், உயிருடன் வவ்வால்களை உண்ணும் காணொளிகளைப் பதிவிட, அதுவே ‘இந்தக் கரோனா பரவுவதும் வவ்வாலை இப்படி உயிருடன் உண்ட தால்தான்’ என்னும் பேச்சுக்கு அடித் தளமாகிவிட்டது. ஆனால், வைரஸ் ஆராய்ச்சியாளர்களின் பல ஆராய்ச்சி முடிவுகளின்படி, வவ்வால்கள் மனிதனுக்கு நேரடியாக வைரஸ்களைக் கொடுப்ப தில்லை என்று தெரிய வருகிறது. வவ் வாலுக்கும் மனிதனுக்கும் இடையில் இன்னுமொரு உயிரூடகம் தேவைப் படுகிறது.
zoonotic வைரஸ்கள் முதலில் வவ் வால்களிலே தோன்றுகின்றன (வவ்வால் களுக்கு அவை எப்படி வந்தன என்று இன்னும் தெளிவாகவில்லை). அந்த வவ்வால்கள், இன்னுமொரு விலங்கிற்கு வைரசைத் தொற்ற வைக்கிறது. அந்த விலங்கே மனிதனுக்கு வைரசைப் பரிசாக அளிக்கிறது. 2003 இல் பரவிய ‘சார்ஸ் வைரஸ்’ (SARS-CoV), சிறிய உருவம் கொண்ட மரநாய் (Palm Civet) என்று சொல்லப்படும் ஒரு விலங்கின் மூலம் மனிதர்களுக்குப் பரவியது. அது போல, 2012 அளவில் மத்திய கிழக்கில் பரவிய ‘மேர்ஸ் வைரஸ்’ (MERS-CoV), வவ்வால்களிலிருந்து ஒட்டகத் துக்குக் கடத்தப்பட்டுப் பின்னர் மனித னுக்குப் பரவியது.
‘கோவிட் 19’ நோய்க்கான கரோனா வைரஸ்கள், வவ்வால்களிலிருந்து சீனா வில் இருக்கும் விசேசமான பாம்பு ஒன்றின்மூலம் அல்லது நாகப் பாம்பின் மூலம் மனிதனுக்குப் பரவியது என்றே ஆரம்பத்தில் நினைத்திருந்தார்கள். ஆனால், கரோனா வைரஸானது சூடான இரத்தம் கொண்ட பாலூட்டிகள் மற்றும் பறவைகள் போன்றவற்றையே வவ்வாலுக்கும் மனிதனுக்கும் இடையே யுள்ள உயிரினமாகத் தேர்ந்தெடுக்கிறது. இதுவரை, பாம்புகள் போன்ற குளிர் இரத்தமுடைய (cold-blooded animal) உயிரினங்களால் கரோனா பரவிய தற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதனால், ‘கோவிட் 19’ நோய்க்கான வைரஸும், நேரடியாக வவ்வாலி னாலோ அல்லது வவ்வாலிலிருந்து பாம்புகள் மூலமாகவோ மனிதனுக்குத் தொற்றியிருக்க வாய்ப்பில்லை. இதை வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போதுதான் ஒரு முடிவு கிடைத்திருக் கிறது.
சீனாவில் ‘எறும்புத் தின்னி’ (Pangolin) என்னும் ஒருவகை மிருகம், உணவுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சந்தைகளில் விற்கப்படுகின்றது. ஆண்மையைத் தூண்டுவதற்கென விதவிதமான விலங் குகளையும், அவற்றின் உறுப்புகளையும் உண்ணும் ஒருவகை நம்பிக்கை சீனா வில் இருக்கிறது (அதுபோன்ற நம்பிக் கைகள் நம்மவர்களிடத்திலும் உண்டு. இதிலெல்லாம் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. அப்படியான ஒரு காரணத்திற்காகவும் இந்த எறும்புத் தின்னி மிருகத்தை சீனர்கள் உண்ணலாம். வூகானில் இருக்கும் மிகப்பெரிய சந்தையில் இந்த மிருகமும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மிருகத்தினூடாகவே வவ்வால்கள், ‘கோவிட் 19’ நோய்க்கான வைரஸை மனிதனுக்குக் கொடுத்திருக்கலாம் என்ற முடிவுக்குத்தான் உயிரியல் ஆராய்ச்சி யாளர்கள் தற்சமயம் வந்திருக்கின்றனர். அந்த மிருகமே இந்தத் தொற்றுக்கான அதிக சாத்தியங்களைக் கொண்டிருக் கின்றது. ஆனாலும், நன்றாக உறுதி செய்யப்படும்வரை மேலும் ஆராய்ச் சிகள் தொடர்கின்றன.
இந்த ஆராய்ச்சிகளின் மத்தியில் இப்போது புதுப் பிரச்சனை ஒன்றும் எழுந்திருக்கின்றது. ஏற்கனவே ‘கோவிட் 19’ நோய்த் தொற்றுக்கு உள்ளாகி முறை யான மருத்துவ சிகிச்சை பெற்றவர்களில் சிலர், முற்றாக வைரஸ் இல்லையென உறுதி செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப் பப்பட்டனர். இப்போது அவர்களுக்கு மீண்டும் அதே வைரஸ் உடலில் பரவியிருக்கிறது என்ற ஓர் அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார மையம் (WHO) தெரிவித்திருக்கிறது. இது சாதாரண விசயம் அல்ல. நோயாளிகள் அனைவருக்கும் PCR (Polymerase Chain Reaction) பரிசோதனை செய் யப்படுகின்றது. அதன்மூலமே அவர்கள் பாசிட்டிவா, நெகட்டிவா என்னும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கடந்த வெள்ளியன்று, தென் கொரியாவில், ஏற்கனவே நோய்வந்து சிகிச்சைபெற்று, இந்தப் பரிசோதனையில் நெகட்டிவ் என வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் 91 பேருக்கு மீண்டும் பாசிட்டிவ் என தெரிய வந்திருக்கிறது. இரை அறிந்து உலகமே ஆடிப்போய் இருக்கிறது. என்ன செய்வதுபென்று தெரியாமல் விழிக்கிறது. அதனால், குணமடைந்த நோயாளி ஒருவரை நெகட்டிவ் எனத் தெரிந்து வீட்டுக்கு அனுப்புவதற்கு முன், மேலுமொருநாள் மருத்துவக் கண் காணிப்பில் வைத்து, இரண்டாம் தடவை யும் பரிசோதனை செய்து அனுப்பும்படி WHOபரிந்துரைத்திருக்கிறது.
இந்த நிலையில் ‘கோவிட் 19’ க்க்கான தடுப்பு மருந்தை உடன் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கடுமையான நிர்ப் பந்தம் உயிரியல் ஆராய்ச்சியாளர்க ளுக்கு ஏற்பட்டிருக்கிறது. பில் கேட்ஸ் உட்பட பல நாட்டு அதிபர்கள் இந்தத் தடுப்பு மருந்தை வெளிக் கொண்டு வருவது பற்றி அவசரமாக உரையாடி யிருக்கிறார்கள்.
எப்போது மு(வி)டிவு ஏற்படும் என்று உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடக் கிறது.
- யாழு சிவா & ராஜ் சிவா
No comments:
Post a Comment