பெங்களூரு, ஏப். 28- கருநாடக மாநிலம், வடகன்னட மக்களவை தொகுதி பாஜக எம்.பி. யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமார் ஹெக்டே (51), சர்ச்சைக்குரிய கருத்து களால் பரவலாக அறியப்பட்டவர். இவர் கடந்த வாரம் தனது டுவிட்டர் பக்கத்தில், டில்லியில் நடந்த தப்ளிக் ஜமாத் மாநாட்டை, கரோனா வைரஸ் பரவலுடன் இணைத்து மத ரீதியிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
டுவிட்டர் பக்கத்தை முடக்குவதாக அறிவிப்பு
இப்பதிவு சர்ச்சையை ஏற்படுத் தியது. இது தொடர்பாக பலரும் டுவிட்டரில் புகார் செய்தனர். இதை யடுத்து டுவிட்டர் நிறுவனம் அனந்த குமார் ஹெக்டேவின் டுவிட்டர் பக்கத்தை முடக்குவதாக அறிவித்துள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய பதிவுகளை அவர் நீக்கினால் அவரது டுவிட்டர் பக்கம் விடுவிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தகவல் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அனந்தகுமார் ஹெக்டே கூறும்போது,
“எனது டுவிட்டர் பக்கம் முடக் கப்பட்டதால் நான் கவலைப்பட வில்லை. என் பதிவுகளை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை. டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் இந்தியாவில் டிஜிட்டல் காலனிய ஆட்சி முறையை உருவாக்க முயற்சிக்கின்றன. அதுகுறித்து பிரத மர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன். உண்மையை விவரிக்கும் எனது கருத்து சுதந் திரத்தில் தேவையின்றி தலையிடும் டுவிட்டர் நிறுவனம் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளேன்'' என்றார்.
No comments:
Post a Comment