இந்தியாவில் கரோனா பாதிப்பு இரட்டிப்ப விகிதம் குறைந்து உள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 22, 2020

இந்தியாவில் கரோனா பாதிப்பு இரட்டிப்ப விகிதம் குறைந்து உள்ளது

மத்திய சுகாதாரத் துறை



புதுடில்லி, ஏப்-22- இந்தியாவில் கரோனாபாதிப்பு இரட்டிப்பு விகிதம் குறைந்து உள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்து உள்ளது.


சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி லாவ் அகர் வால் கூறியதாவது:கரோனா வைரஸ் பாதிப் புகளின் இரட்டிப்புவிகிதம் ஊரடங்கு 3.4 நாட்களில் இருந்ததை விடதற்போது 7.5 நாட்களாக குறைந்து விட்டது.


கடந்த ஏழு நாட்களின் அடிப்ப டையில், இந்தியாவின் ஒட்டு மொத்த கரோனா பாதிப்பு விகிதம் 7.5சதவீதமாக உயர்ந் துள்ளது. இந்தியாவில் இதுவரை 17,265 கரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.


கடந்த 24 மணிநேரத்தில் 1,553பாதிப்புகள் கண்டறியப் பட்டதால், இது வரை ஒரு நாளில் பதிவான மிகப்பெரிய பாதிப்பு எண்ணிக்கை இது வாகும். 


மொத்தம் 543 பேர் பலியாகி உள்ளனர்.கடந்த 24 மணிநேரத்தில் 36 இறப்புகள் மத்திய சுகாதாரத் துறைபதிவாகியுள்ளன. ஏப்ரல் 19 வரை, 18 ஏப்ரல் 19 வரை, 18 மாநிலங்கள் தேசிய சராச ரியை விட சிறப்பாக செயல் பட்டன இந்த பட்டியலில் டெல்லி, கர்நாடகா, தெலுங் கானா, ஆந்திரா, ஜம்முகாஷ் மீர், பஞ்சாப், சத்தீஸ்கார், தமிழ்நாடு மற்றும் பீகார் ஆகியவை அடங்கும். நாடு முழுவதும் 59 மாவட் டங்களில்கடந்த 4நாட்களாக கரோனா வைரஸ் தொடர் பான வழக்கு எதுவும் இல்லை கோவாவில், ஏழு கரோனா வைரஸ்கள் காணப்பட்டன, அனைத்து நோயாளிகளும் குணமாகி விட்டனர் பாதிப்புகள் எதுவும்கண்டறியப்பட வில்லை என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment