ஊரடங்கில் கழகத் தோழர் மேற்கொண்ட பணிகள் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 29, 2020

ஊரடங்கில் கழகத் தோழர் மேற்கொண்ட பணிகள்

வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.


கரோனா ஊரடங்கு காலத்தில் நான் மேற்கொண்ட பணிகள்.


கரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவினால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் இன்றைய சூழல்நிலையில் நமது உடலை முடக்கி னாலும், சமூகப் புரட்சிப் போர் வீரர்களான கருஞ்சட்டைத் தோழர்களின் சிந்தனைக்கு முடக்கம் அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளவாறு அய்யா அவர்களின் யோசனைகள் மற்றும் அறிவுறுத்தலின்படி பின்வரும் பணிகளை மேற்கொண்டேன்.


தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட தஞ்சாவூர், பட்டுக் கோட்டை, கும்பகோணம், மன்னார்குடி மாவட்டங் களில் உள்ள அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர் கள் மற்றும் தோழர்களின் முகவரிகள் - தொலைப்பேசி எண்கள் சேகரித்து பட்டியலிட்டுள்ளேன்.


தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப் பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் முகவரிகள், தொலைப்பேசி எண்கள் சரிபார்த்து பட்டியலிட்டு உள்ளேன்.


கரோனா தொற்று தடுப்பு பணிகளில் (ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல், கபசுரக் குடிநீர் வழங்குதல், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு விளம்பரம் செய்தல்) ஊராட்சி மன்றத் தலைவரோடு இணைந்து செய்து வருகிறேன்.


தற்போது காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற தஞ்சை மண்டலத்திற்கு உட்பட்ட நான்கு மாவட்ட (தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, கும்ப கோணம்) கலந்துரையாடல் கூட்டம் மற்றும் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதன்மூலம் ஆசிரியர் அவர்களின் நலன், அவரின் மேற்கொள்ளும் அன்றாட பணிகள் குறித்தும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து. திராவிடர் கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகப் பொதுச் செயலாளர்கள் அன்புராஜ், ஜெயக்குமார் ஆகியோரின் கருத்துரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.


மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அய்யா அவர்களைக் காணொலி வாயிலாக பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் இளைஞர்களை உற்சாகமூட்டும் வகையில் ஆசிரியர் மற்றும் பொதுச் செயலாளர் அன்புராஜ் ஆகியோரின் கருத்துரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.


கரோனா நோய் தொற்று காரணமாக போக்குவரத்து தடைபட்டு இருந்த போதும் விடுதலை நாளிதழ் றிஞிதி வடிவில் தினமும் 2.30 மணிக்கெல்லாம் செல்போன் மூலம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தினந்தோறும் வெளிவரும் ஆசிரியர் அவர்களின் அறிவுரைகள் அடங்கிய அறிக்கைகள், தலையங்கம், கழகச் செய்தி களைப் படித்து தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது. மேலும் றிஞிதி வடிவிலான விடுதலை நாளிதழை எனது நண்பர்களுக்கும் தினமும் அனுப்பு கிறேன்.


ஆசிரியர் கட்டளையை ஏற்று தஞ்சை மாவட்ட இளைஞரணி சார்பில், கரோனா நோய்த் தொற்றை எவ்வாறு தடுப்பது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தஞ்சை தெற்கு ஒன்றியம் கொல்லாங்கரை, உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூர் ஆகிய கிராமங்களில் நடத்தினோம், அப்போது பொது மக்களுக்கு கை கழுவும் பழக்கம் ஏற்படும் வகையில் செய்முறை விளக்கமும், சோப்பும் வழங்கப்பட்டது.


ஓய்வு நேரங்களில் இயக்கப் புத்தகங்களை வாசிக் கவும் செய்கிறேன்.


நன்றி அய்யா


இப்படிக்கு


வே.ராஜவேல்


தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்


திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment