சென்னை,ஏப்.19, தமிழக முதல மைச்சர் நிதானமாகப் பேசவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு,
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு.எடப் பாடி கே.பழனிசாமி (17.04.2020) எதிர்க்கட்சிகளுக்கு, குறிப்பாக எதிர்கட்சித் தலைவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என சீறிப் பாய்ந்துள்ளார். எதிர்க்கட்சிகள் கோவிட்19 தொற்று நோய் பரவல் தடுப்பு நட வடிக்கைகளுக்கு இடையூறுகள் செய்வதாக கற்பனையில் கட்ட மைத்த குற்றச்சாட்டு கூறியுள்ளார். முதல்வரின் பேட்டி செய்திகளை ஏடுகளில் பார்த்த போது அவர் நிதானத்தில் தான் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.
கோவிட் 19 தொற்று நோய் பரவலைத் தடுக்கவும், நாடு முடக்கம் நடவடிக்கையால் பாதிக்கப்படுவோ ருக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், ரூபாய் 15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கையை ஆதரித்து, முதலமைச்சர் கேட்டுள்ள பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக தாமதமின்றி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. கோவிட் 19 தொற்று நோய் பரவல் தடுப்பு பெரும் சவாலாகியுள்ளது. இதனை எதிர்கொள்ள அனைவரும் முதலமைச் சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். எதிர்க் கட் சிகள் அதனதன் சக்திக்கு தக்க படி உடனடியாக முதலமைச்சர் நிவாரண நிதி பங்களிப்பு செலுத் தின. மேலும் எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்கள். கோவிட் 19 தொற்று நோய் பாதித் தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க இடவசதி அரசுக்கு தேவை எனில் கட்சி அலுவலகங் களை பயன்படுத்தி கொள்ள ஒப்புதல் கடிதங்களை வழங்கியுள் ளன. இது தவிர கோவிட் 19 தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் தடுப்புக் கருவிகள், முகக்கவசம், கைதுடைப்பான், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களை எதிர்க்கட்சிகள் தங்கள் செலவில் வழங்கி வந்தன. கோவிட் 19 தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் பரிசோதனை மய் யங்களை அதிகப்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடு முடக்கம் காரண மாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், அமைப்பு சாரத் தொழி லாளர்கள், சாலையோர வியாபா ரம் செய்வோர் உள் ளிட்ட அனைவருக் கும் நிவாரண நிதி உள் ளிட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண் டும் என வலியுறுத்தி வருகின்றன. இவையெல் லாம் டாக்டர் எடப்பாடி கே.பழனி சாமி அவர்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளாக தெரியவில்லையா?
ஜனநாயக அரசியல் அமைப்பில் எதிர்க்கட்சிகளும் உள்ளடங்கி இருப்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். இதையெல் லாம் மறந்து விட்டு, அதிகார போதையில் எடப்பாடியார் நிதானம் இழந்து பேசுவது முதல மைச்சர் என்ற மாண்பமைந்த பொறுப்புக்கு தீராக்களங்கம் ஏற் படுத்தும் செயலாகும். முதலமைச்சர் திரு,எடப்பாடி கே.பழனிசாமி அவரது எதிர்மறை அணுகுமுறையை உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment