புதுடில்லி, ஏப். 30- ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங் களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர் கள், சுற்றுலாப் பயணிகளை அவர்களது சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண் டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப் பித்துள்ளது.
கரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின் னர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள தனிக்குழுவை நியமிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவிய கரோனா வைரசைக் கட்டுப் படுத்தும் நோக்கில் முதலில் நாடு முழுவதும் 21நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. பின்னர், மேலும் 19 நாட்களுக்கு அதாவது மே மாதம் 3ஆம்தேதி வரை இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டது. கரோனா பாதிப்பால் நாடு முழுவதும் போக்குவரத்து சேவைகள் முடங்கி இருக்கிறது.
இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஊர டங்கு காரணமாக தொழில் நிறுவனங்களும் செயல்படாத நிலை ஏற்பட்டதால், தங்கும் இடம், உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய் யவும் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் தவித்து வருகின் றனர். அதேபோல், ஆன்மீகப் பயணம் மேற்கொண்டவர் கள், பிற நோக்கங்களுக்காக வெளிமாநிலம் சென்றவர் களும் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. புலம்பெயர் தொழிலாளர் கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலை யில், வெளிமாநிலத் தொழிலா ளர்கள் சொந்த ஊர் செல்ல உள்துறை அமைச்சகம் அனு மதி அளித்துள்ளது.
இது தொடர்பாக உள் துறை அமைச்சகம் வெளியிட் டுள்ள அறிக்கையில்; புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள், மாண வர்கள் உள்ளிட்டோர், ஊர டங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் பல் வேறு இடங்களில் தவித்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு மாநி லம் அல்லது யூனியன் பிரதே சத்தில் தவிக்கும் வெளி மாநி லத்தவர்கள், தங்களது மாநி லம் அல்லது யூனியன் பிர தேசத்திற்கு குழுவாக செல்ல விரும்பினால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஆலோசனை நடத்தி, சாலை மார்க்கமாக அவர்களை அழைத்து வர ஒப்புக்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று இல்லாதவர் கள் மட்டுமே சொந்த ஊர்க ளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். குழுவாக செல்ல விரும்புவோர்கள் பேருந்து களில் மட்டுமே செல்ல வேண் டும். அந்த பேருந்து தூய்மைப் படுத்தப்பட்டிருப்பதுடன், சமூக விலகல் முறைப்படி இருக்கைகள் அமைக்க வேண் டும். இடம்பெயரும் நபர்கள் தங்கள் இருப்பிடங்களை அடைந்தவுடன், உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வீட் டுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இடம் பெயரும் நபர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தத வலியுறுத்த வேண்டும். அவர்களின் உடல் நலம் கண்காணிக்கப்பட வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment