தினத்தந்தி' - தமிழர்கள் மதிக்கும் தமிழர் நாளேடு!
அய்யா சி.பா. ஆதித்தனார் அவர்களின் கடும் உழைப்பால் எவரும் எட்ட முடியாத உயரத்திற்குச் சென்று சாதனை புரிந்துள்ள ஏடு.
அதில் ஆரியம் ஊடுருவி, அதற்குத் தேவையில்லாமல் கெட்ட பெயரைச் சம்பாதித்துத் தருவதற்கு அதன் நிர்வாகம் அனுமதிக்கலாமா?
கரோனா தொற்று ஒழிப்பில் நாடே பதைபதைத்துள்ள நிலையில், அறிஞர் அண்ணாவையும், தி.மு.க.வையும் மறைமுகமாகக் கேலி செய்யும் வண்ணம் ஒரு கேலிச் சித்திரம் தேவையா?
ஏன் இந்த விஷ(ம)ப் புத்திக்கு இடம்?
‘தினத்தந்தி' டி.வி.யில் ஒரு பார்ப்பன விஷம் ஓடியதை வெளியேற்றி, தங்களைப் பாதுகாத்தீர்கள்! இப்போது ஆதித்தனார் - அய்யா - அண்ணா - திராவிட இயக்க நல்லுறவைச் சீர்குலைத்து, சிண்டுமுடியும் கீழறுப்பைச் செய்ய கீழ்மதியாளர்களை இப்படி கேலிச் சித்திரம் வரைய அனுமதிக்கலாமா?
தேவையற்ற கெட்ட பெயரை - உண்மை திராவிடர் இயக்கங் களின் எதிர்ப்பை மட்டுமல்ல, அண்ணாவினால் பெற்ற பயனை மறந்து அவரையே கொச்சைப்படுத்தும் செயல் ஊடுருவ அனுமதிக்கலாமா?
எனவே, இதற்குத் தக்க பரிகாரம் காணவேண்டும் -
பயிர் விளையும் இடத்தில், களையையும் அனுமதிப்பது - அதன்மூலம் அதன் நிம்மதி கெடுவது தேவையா?
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.4.2020
No comments:
Post a Comment