காவிரி நதிநீர் ஆணையத்தை
மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைப்பதா?
காவிரி நதிநீர் ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைப்பது என்ற மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும். தமிழ்நாட்டைத் திட்டமிட்டு வஞ்சிப்பதும் ஆகும். மக்களின் கவனம் எல்லாம் தொற்று நோயை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும், ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், சூழ்நிலையில் இப்படி ஒரு முடிவை மத்திய அரசு எடுப்பது ஏன்?
ஊரடங்கை ஒரு பக்கம் அறிவித்துவிட்டு, மறுபக்கம் மக்களைப் போராட்டக் களத்திற்குத் தூண்டும் செயல் புத்திசாலித்தனமானது தானா? மாநில உரிமைகள் ஒவ்வொன்றையும் கபளீகரம் செய்வதுதான் மத்திய பிஜேபி ஆட்சியின் திடமான திட்டமா? அதற்கும் கூட நேரம் காலம் பாராத கண்மூடித்தனமா?
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் இப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத்திய அரசு இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல் அனைத்துக் கட்சிகளையும் கலந்து கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.4.2020
No comments:
Post a Comment