செய்தித் துளிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 26, 2020

செய்தித் துளிகள்

* தமிழ்நாட்டில் ‘பிளாஸ்மா' சிகிச்சைக்கு மத்திய அரசிடம் அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலை.


* தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் 33 ஆயிரம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. (குருதிக் கொடை அளிப்பீர்!).


* சென்னை ஆர்.கே. நகர் கல்லூரியில் கரோனா வார்டு அமைக்க மக்கள் எதிர்ப்பாம்!


* ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், பெட்ரோல் பங்க், ஊடகங்கள் செயல்படும்.


* கரோனா தாக்கத்தால் இந்திய விமான சேவை மற்றும் அது சார்ந்த துறைகளில் 29 லட்சம் வேலை வாய்ப்புப் பாதிப்பு.


* சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்' திருப்பி அனுப்பப்பட உள்ளன.


* இந்தியாவில் கரோனா தொற்று இல்லா மாநிலம் திரிபுரா.


* கட்டுப்பாடுகளைத் தளர்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு.


* கரோனா தொற்று குறித்து சென்னையில் மத்தியக் குழு ஆய்வு.


* ஏப்ரல் 30 அன்று ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள் மேலும் இரு மாதங்கள் பணியாற்றிட உத்தரவு (தற்காலிக பணி என்ற அடிப்படையில்).


* சென்னையில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஊரடங்கு உள்ள நிலையில், நடமாடும் காய்கறிக் கடைகளுக்கு அனுமதி.


* கோவை, சேலம், திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, நீலகிரி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் அடுத்த சில நாள்களில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பொழிய வாய்ப்பு!


* ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி - குண்டர் சட்டத்தில் கைது செல்லாது.


* மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 900 முதுகலைப் பட்டதாரிகளுக்கு மூன்று ஆண்டுகள் பணி நீடிப்பு.


No comments:

Post a Comment