சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வலியுறுத்தல்
. சென்னைப் | சென்னை , ஏப். 22- உலகத் தையே உலுக்கிக் கொண்டி ருக்கும் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்தச் சூழ் நிலையிலும் கடமையாற்றி வரும் பத்திரிகையாளர்கள்,
கரோனா தடுப்பு நடவடிக் கைகள் தொடர்பான ஆலோ சனைக் கூட்டம், முதலமைச்சர்,அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், மாநகராட்சி செய ஆணையர், காவல்துறை உயர் அதிகாரிகள் போன்றோ ரின் செய்தியாளர் சந்திப்புகளிலும், சிலர் நடத்தும் உதவி வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டியுள்ளது.
இவற்றில் பங்கேற்க ஒவ்வொருதொலைக்காட்சியில் இருந்தும் செய்தியாளர், ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் என குறைந்தது நான்கு பேர் செல்கின்றனர். இவர்களுடன் நாளிதழ் செய்தியாளர்கள், ஒளிப்படக்கலைஞர்கள் என ஏராளமானோர் திரண்டு விடுகின்றனர்.
இவற்றைத் தவிர்த்தாலே கரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து பத்திரிகையாளர்களைக் காப்பாற்ற முடியும்.
மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கும் சென்னை யில் மூன்று பத்திரிகையாளர் களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பத் திரிகையாளர்களைப் பாது காக்க அரசும் ஊடக நிறுவ னங்களின் நிர்வாகிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென் னைப் பத்திரிகையாளர் சங் கம்(MUJ)கேட்டுக்கொள்கிறது.
கரோனாவைரஸ்தொடர் பான செய்தியாளர் சந்திப்பு கள் உடனடியாகரத்து செய் யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால்... அவற் றைப் புறக்கணிக்க ஊடக நிறு வனங்கள் முன்வரவேண்டும். அதிகாரிகள் முதல் அமைச்சர்கள், முதலமைச்சர் வரை அனைவரும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கும் தக வல்களை செய்திக்குறிப்புக ளாகவோ (Press note), காணொலி காட்சிப் பதி வாகவோ (Video footage) மின்னஞ்சல் மூலம் ஊடகங் களுக்கு அனுப்பி வைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். ஊடக நிறுவனங்களும் இந்த முறையில் பிரத்தியேக செய்திகளை (Exclusive) பெற வும் முயற்சிக்க வேண்டும்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இவை அனைத் தையும் எளிதாகச் செய்ய முடியும் என்பதுடன், கரோனாபாதிப்பில் இருந்து பத்திரிகையாளர்களையும் பாதுகாக்க முடியும்.
கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியி லிருந்து பத்திரிகையாளர்க ளைப்பாதுகாக்கும் வகையில், பணி முறையில் இந்த மாற் றங்களைச் செய்திட ஊடக நிறுவனங்கள் முன்வர வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவர் வே.சிறீதர்,பொதுச் செயலாளர் எல்.ஆர்.சங்கர், பொருளாளர் மணிமாறன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment