எச்சரிக்கை -1
உலகம் முழுவதும் கரோனா தொற்று 27,96,113 - உயிரிழப்பு 194,545. இந்தியாவில் பாதிப்பு 23,452 - பத்து நாள்களில் இரு மடங்கு. உயிர்ப்பலி 723 - உலகில் இந்தியா 15ஆம் இடத்தில். இந்தியாவில் மழைக்காலத்தில் தொற்று அதிகரிக்கும் - விஞ்ஞானிகள் கருத்து. தமிழ்நாட்டில் பாதிப்பு 1755. நேற்று மட்டும் 72 பேர். உயிர்ப்ப லி 22. அதிக பாதிப்பு என்ற பட்டியலில் சென்னை என்று மத்திய உள்துறை அறிவிப்பு.
எச்சரிக்கை -2
சென்னை , கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல். காஞ்சி, செங்கற்பட்டு மாவட்டங்களிலும் அமல். மளிகை, காய்கறிக் கடைகளும் மூடப்படும். சேலம், திருப்பூர் - ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 வரை முழு ஊரடங்கு.
எச்சரிக்கை -3
அறிகுறி இல்லாமல் கரோனா பரவுவதைக் கண்டு சீனா கதி கலங்கிப் போயிருக்கிறது. கடந்த 23ஆம் தேதி மட்டும் கரோனா அறிகுறியேயில்லாத 27 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது இதுவரை இந்த வகையில் 984 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனராம். எப்படி இருக்கு?
எச்சரிக்கை -4
கரோனா தொற்று குறையத் தொடங்கிவிட்டது என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம். தற்போது முதற்கட்டம் தான். இந்த வைரஸ் பாதிப்பு நீண்ட காலம் தொடரும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.
No comments:
Post a Comment