மறைந்த டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் உடலை - அவரது குடும்பத்தார் வேண்டுகோளை ஏற்று கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்க!
செய்தியாளர்கள் - ஏடுகளை விநியோகம் செய்வோர் நலன் பாதுகாப்பு அவசியம்!!!
செய்தியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரைப் புதைக்கும்பொழுது அதனைத் தடுப்போர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும் என்றும், செய்தியாளர்கள், ஏடுகளை விநியோகம் செய்வோர் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்றும், செய்தியாளர்கள் சந்திப்பைத் தவிர்த்து, அமைச்சர்களும், தலைவர்களும் கருத்துகளை இணையத்தின்மூலம் அனுப்பலாம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:
துயரத்திற்கும், துன்பத்திற்கும் உரியது
தமிழ்நாட்டில் நமக்கெல்லாம் தலை குனிவை ஏற்படுத்திய நிகழ்வு- சென்னை மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் என்ற (55 வயது) மருத்துவர் கடந்த 2 நாள்களுக்கு முன் கரோனா நோயினால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற வேதனையுடன், அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய, அப்பகுதியிலிருந்த சிலர் மறுத்து, ஆம் புலன்சில் சென்றவர்களையும் தாக்கிய மிருகத்தனமும் இணைந்த மனிதாபிமானமற்ற செயலால், அவரது உடலை உடன் வந்த மருத்துவர் களும், ஊழியர்களும், காவல்துறை உதவி யோடு - வேலங்காடு மயானத்தில் - மண்ணைத் தள்ளி மூடி அவசர அவசர மாகப்புதைத்துவிட்டு வந்துள்ளனர் என்ப தாகும். அப்போது அவரது குடும்பத்தினர் எவரும் அங்கே இல்லை என்பது அதனினும் துயரத்திற்கும், துன்பத்திற்கும் உரியது.
முதலமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியது வருமாறு: "மருத்துவப் பணியில் ஈடுபட்டு, நோய்த் தொற்றுக்கு ஆளாகி, தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற ஓரிரு சம்பவங்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கின்றது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னலம் கருதாமல், மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்கள் இன்னு யிரைத் துறப்பவர்களுக்குத் தகுந்த மரி யாதை அளிக்கும் விதத்தில், பொதுமக்கள் அனை வரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக் கும் எனவும், டாக்டர்கள் மற்றும் பிற களப் , பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை உள்ள எனவும், தமிழக அரசு உங்கள் பக்கம் முழு , மையாக நிற்கும் என்பதையும் இத்தருணத் தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அந்தக் கலவரத்தைச் செய்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத் துள்ளதோடு, இனியாவது இதுபோன்று அடக்கம் செய்யக் கொண்டுவரும் சட லத்தை மறித்தால், வன்முறையில் ஈடுபட் டால் குண்டர் சட்டம் பாயும் என்று மாநகர காவல்துறை ஆணையர் திரு.விசுவநாதன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதும் வரவேற் கத்தக்கது!
மறைந்த மருத்துவரின் துணைவியாரின் வேண்டுகோள்!
மறைந்த மருத்துவரின் துணைவியார் திருமதி ஆனந்தி அவர்கள், முதலமைச் சருக்கு ஓர் உருக்கமான வேண்டுகோள் " விடுத்துள்ளார். அதில், தனது கணவர் மருத்துவர் உடலை, கீழ்ப்பாக்கம் கல் லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும். 2015 ஆம் ஆண்டு சென்னை , மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது சுமார் 60 முகாம்களுக்குமேல் ஏற்பாடு செய்த மனிதநேயர் - பெரியார் ஈ.வெ. ரா.நெடுஞ்சாலையில் மருத்துவமனை நடத்தி, ஏழை, எளிய நோயாளிகளுக்கும் உதவி, மருத்துவப்பணியைத் தொண்டாகக் கருதியவர். அவரது உடலை ஓர் அநா தையைப்போல புதைத்துவிட்டதும், குடும் பத்தவர் எவரும் அருகில் இல்லை என்ப தைப்பற்றியும் கூறியுள்ளார்.
தமிழக அரசின் இன்றியமையாத கடமை வேண்டுகோளை ஏற்று, அந்த சடலத்தைத் முதலமைச்சர் அவர்கள், அவரது இந்த தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்திலேயே புதைக்க ஆணையிட்டு ஆவன செய்வது அவர்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, மிகவும் புண்பட்ட நெஞ்சங்க ளோடு உள்ள மருத்துவர்களுக்கும், மருத் துவத் துறையினருக்கும்கூட மிகுந்த ஆறு தலைத் தரும் என்பதால், நாமும் அந்த வேண்டுகோளை வைத்து வற்புறுத்துகி றோம். மனிதாபிமானத்துடன் இனிவரும் மரணமடைந்த நோயாளிகளை அடக்கம் செய்ய உரிய ஆணைகள், ஏற்பாடுகள் சென்றடைய வேண்டும். இறந்தவர் உடலினால் கரோனா தொற்றுப் பரவ வாய்ப்பில்லை; மற்றவர் அச்சப்படவேண்டியதில்லை என்பதையும் என்பதையும் மக்களுக்குத் தெளிவுபடுத்துதல் தமிழக அரசின் இன்றியமையாத கடமையும் ஆகும்.
செய்தியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு தேவை!
அதுபோலவே, மகாராட்டிரத்திலும், டில்லியிலும் இங்கும்கூட செய்தியாளர்கள் - அவர்களும் உயிரைப்பணயம் வைத்துத் தான் செய்தியாளர்கள் சந்திப்பு - செய்தி களைச் சேகரித்துத் தரும் முக்கிய கடமை யாற்றுகின்றனர். அதுபோலவே, செய்தித் தாள்கள் விநியோகம் செய்வோரும்கூட தங்களது கடமையை- கரோனா அச்சுறுத் தலையும் சமாளித்து செய்கின்றனர். இத்தகையவர்களுக்குப் போதிய போதிய பாதுகாப்பு மிகமிக அவசரத் தேவை. போதிய அளவில் செய்வது முக்கியம் அவர்களுக்கு அரசு உதவிகளைப் என்றாலும், அவர்களை அழைத்து, இந்த ஊரடங்கு நெருக்கடி உச்சகட்டம் தாண்டும் வரை - செய்தியாளர்கள் சந்திப்பைக் கைவிடுதலும், மின்னஞ்சல் மூலம் ஊடகங் களுக்கும், பத்திரிகை அலுவலகங்களுக்கும் செய்திகளை - அரசு வெளியீடுகளாகவே அனுப்பலாம். |
அதுபோலவே அத்துணை அரசியல் கண்காணிப்பு. கட்சிகளின் - அமைப்புகளின் தலைவர் களும் இதனைப் பின்பற்றலாம்!
கட்டுப்பாடுகளைக் கண்டிப்புடன் கடைபிடிக்கத் தவறக்கூடாது
நாளும் எண்ணிக்கைக் கூடுவது கண்டு மக்களின் அச்சமும், வேதனையும் அதிக மாகும். பொதுமக்களும் கட்டுப்பாடுகளைக் கண்டிப்புடன் கடைபிடிக்கத் தவறக்கூடாது இரண்டு லட்சம் பேருக்குமேல் ஊர டங்கு சட்டத்தை தமிழ்நாட்டில் மீறினார்கள். ஒரு கோடி ரூபாய்க்குமேல் அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது என்பது நமக்குப் பெருமை தரும் செய்தியா? மிக்க அவமானத்தையும், பொறுப்பற்றதனம் பொங்கி வழிந்ததைக் காட்டும் பொல் லாங்குச் செயல்களே ஆகும்.
நமக்காக, நம் உடல்நலப் பாதுகாப்புக்காக...
கட்டுப்பாடுகள் - தனி நபர் இடைவெளி - உள்ளிருத்தல் - யாருக்காக? நமக்காக, நம் உடல்நலப் பாதுகாப்புக்காக என்ற அடிப் உடல்நலப் பாதுகாப் படை அறிவைக்கூட துறந்தால், மனித சிந்தித்துச் செயலாற்றட்டும் அனை ஆறறிவினால் என்ன பயன்? வரும்! ஒத்துழைப்பே, நம்மை உயர்த்தும் -
-கி.வீரமணி, தலைவர்,திராவிடர் கழகம்
சென்னை -22.4.2020
No comments:
Post a Comment