விடுதலையால் நமக்கெல்லாம் பெருமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 27, 2020

விடுதலையால் நமக்கெல்லாம் பெருமை


நம் விடுதலையில் கடந்த ஆறு நாட்களாக வெளி வந்த தொடர் கட்டுரை, பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்-காலந்தோரும் பிராமணியம் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சமூக சீர்திருத்தம் - திராவிடர் கழகம் (தி.க) என்ற அத்தியாயத்தில் புத்தக ஆசிரியர் பேராசிரி யர் அருணன் அவர்களின் கட்டுரை பல பேரின் சிந்தனைக்கான ஓர் உரைகல் . பொதுவுடமை இயக்கப் பெருந்தகையின் அற்புதமான ஆய்வறிக்கை அய்யா விற்குப் பின், அம்மா அவர்கள் உலகிலேயே ஒரு நாத்திகப் பேரியக்கத்திற்கு தலைமை தாங்கி நல்ல பல அடித்தளங்களை அமைத்தார்கள், பார்த்தோ மேயானால் அதிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் பங்கு அளப்பரியது. அன்னையாருக்கு பின் தொடங்கி இன்று வரை ஓர் அமைதிப்புரட்சியை அறிவுசார் வழியில் பெரியாரின் கொள்கைகளை, கோட்பாடுகளை சற்றும் பிறழாமல் தன் மூச்சு, பேச்சு, எண்ணம், செயல் அனைத்துமே மொழி, இனம், சமூகக் கண்ணோட்டம் மற்றும் மனிதநேயம் இவை சார்ந்த வைகளே ஆகும்.


'விட்டேனா பார் தமிழரின் பகைவரைக் கட்டாயம் தொலைப்பேனெனக் கழறும்' என்ற தன் நிலைப் பாட்டில் 'சொல்லுக சொல்லிற் பயனுடைய....'என்ற வரி களுக்கேற்பவும் சொல்லுவதும் அதையே சொல்லிய வண்ணம் செயல் படுத்தி, தினைத்துணை நன்றியானா லும் அதன் முழுத்தன்மைகளை உள்வாங்கி, தான் மட்டுமேயல்லாமல் தனது தோழர்களையும் அவ்வாறே  செயல்பட செய்பவர்  ஆசிரியர் அவர்கள்.


இன்றைக்கு அவரின் செயல்பாடுகள் தந்தை,தாயை விஞ்சிய  தனயனாக  தமிழகத்திற்கு, ஏன் இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழி காட்டுகிறார். ஒருமுறை மேனாள் இந்திய தலைமையமைச்சர் திரு.வி.பி.சிங் சொன்னதைப்போல "நீங்கள் வழி நடத்துங்கள் நாங்கள் உங்கள் பின் வருகிறோம்", என்பதற்கிணங்க வழி வெளிச்சத்தை எல்லார்க்கும் எல்லாமும் என்ற நிலை நோக்கி பயணிக்கிறார். அப்படி செயல் படும் தலைவரின் ஒரு செயல்பாடான சமூக சீர்திருத்தம் என்ற பொருளில் ஒரு குப்பியில் இட்டு இன்றைய அறிவுசார்  இளை ஞர்களை, உலகத்தினரை அறியச் செய்து இருப்பது  மிக்க மகிழ்ச்சி  அளிக்கும் செயலாகும்.


பல ஆயிரம் பேர் அய்யாவின் அடிச்சுவட்டில்  ஆயுதங்களாக வந்த நிலையில் அவர் தம் அடிச்சுவடே எனது இலட்சியம், வாழ்க்கை இறுதி  மூச்சடங்கும் வரை அவைகளே எனது பயணம் என்று நாளும்  உழைத்து வரும்  தமிழர்  தலைவர்  அய்யா அவர்களின்  பணியினால் நாமும் பயனடைந்தோம் , பயணிக்கிறோம் என்பது  நமக்கெல்லாம் பெருமை. மீண்டும் பேராசிரி யர்அருணன் அவர்களுக்கு  நன்றி, இது போன்று  பல ஆய்வறிக்கைகள் வெளி வருவது மனித குலத்திற்கு  மேலும்  பயனளிக்கும் என்பது  திண்ணம்.


இன்றைய  சூழலில்  தனி விலகலைக் கையாள் வோம்! கரோனாவை தனிமைப்படுத்தியழிப்போம் !!


வாழ்க பெரியார்! வாழ்க தமிழர் தலைவர் !!


- பேராசிரியர் நல்.இராமச்சந்திரன்


No comments:

Post a Comment