கிருமி நாசினி தயாரிக்க அரிசியைப் பயன்படுத்துவதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 22, 2020

கிருமி நாசினி தயாரிக்க அரிசியைப் பயன்படுத்துவதா


மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்


புதுடில்லி , ஏப்.22 கிருமி நாசினி தயாரிக்க அரிசி பயன்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது குறித்து ராகுல்காந்திகடும்கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய உணவுக்கழகத்தில் உபரியாக உள்ள அரிசியை எத்தனால் ஆகமாற்றி அதன் மூலம் கைகளை சுத்தப் படுத்தும் ஆல்கஹால் அடிப்படையிலான கிருமி நாசினியை தயாரிக்கவும் மற்றும் அந்த எத்தனாலை பெட்ரோலுடன் கலக்கவும், தேசிய உயிரி எரிபொருள் ஒருங் கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இதற்கு மத் திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் முன் னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர் பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப்பதிவில், நாட்டில் உள்ள ஏழைகள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.


அதேசமயம் அவர்களுக்கான அரிசியை பயன்படுத்திபணக் காரர்களின் கைகளை கழு வும்கிருமி நாசினி தயாரிக்கும் முயற்சி மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்தி யாவில் உள்ள ஏழைகள் எப் போதுதான் விழித்துக்கொள் ளப் போகிறார்களோ? என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment