அய்.நா.அவை வலியுறுத்தல்
அய்.நா.அவை வலியுறுத்தல் நியூயார்க்,ஏப்.22 கரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று அய்.நா.அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கரோனாவைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடு களும் போராடிக் கொண்டு இருக்கின்றன. இந்த நோய்க் கிருமியை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ அறிவியலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 193 நாடு களை உறுப்பினர்களாக கொண்ட அய்க்கிய நாடுகள் அவையில், பெருந்தொற்று நோயான கரோனாவால் இதற்கு முன் எப்போதும் இல்லாத பாதிப்பு உலக நாடு களுக்கு ஏற்பட்டு இருப்பதா கவும், எனவே, இந்த நோய்க்கிருமியை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான ஒத் துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி கடந்த 2ஆம் தேதி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
பின்னர், கரோனா பாதிப்பு நிலவும் இந்த சூழ்நிலையில் வர்த்தகப் போரை கைவிட கோரியும், தன்னிச்சையான பொருளாதார தடைக்கு எதிராகவும்ரஷியாகொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்துகண்டுபிடிப்பது, புதிய மருத்துவ உபகரணங் களை தயாரிப்பது, மருத்துவ பரிசோதனை, மருந்து பொருள்கள் வழங்கலில் ஒருவருக்கொருவர் உதவுவது மற்றும் பன்னாட்டளவில் பொருளாதாரத்தை மேம்ப டுத்துவது ஆகியவற்றில் உலக நாடுகள் ஒருங்கி ணைந்து செயல்பட வேண் டும் என்பதை வலியுறுத்தி
மெக்சிகோவின் சார்பில் வரைவு தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்த விஷயத்தில் அய்.நா. பொதுச்செயலாளர் அன் டோனியோ குட்டரெஸ் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயல்படவேண் டும் என்று வலியுறுத்தியுள்ள தாக அதில் கூறப்பட்டு இருந் தது. இந்த மசோதாவை அய்.நா. பொது அவையின் தலைவர் திஜானி முகமது பாண்டே 193 உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார்.
அய்.நா. அவையின் புதிய விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் ஒரு நாடு எதிர்ப்பு தெரி வித்தாலும் இந்த தீர்மானம் நிறைவேறாது. ஆனால், எந்த நாடும் எதிர்க்கவில்லை என்றும், இதனால் தீர்மானம் அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் ஒருமனதாக நிறைவேறி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment