கரோனாவிலும் அட்சய திருதியை என்று கல்லா கட்டும் தந்திரம்!
கடந்த இரண்டு, மூன்று நாள்களாக நகை வியாபாரிகள் இணையதளத்தின் மூலம் தங்கள் கல்லா கட்டும் வேலையைத் தொடங்கிவிட்டனர்.
நாட்டில் எது நடந்தால் என்ன, மக்களிடம் மூடநம்பிக்கைக்கா பஞ்சம்? நாளை (26.4.2020) அட்சய திருதியை நாளாம். இந்த நாளில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் செழிக்குமாம். தங்கம் குவியுமாம். இந்த மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி இணையத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பு கின்றனர். ஏடுகளிலும் விளம்பர மழை! தங்க நாணயங்கள் நகைகளை விற்றிட இந்த ஏற்பாடு. கரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு முடிந்த பிறகு வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நகைகளைச் செய்துக் கொடுப்பார்களாம்
எப்படி வியாபார தந்திரம்! அட்சய திருதியை என்றால் என்னவாம்? தீபாவளிபோன்றே இந்த நாளுக்கு ஊர் ஊருக்கு புதுப்புதுக் கதைகள், அந்த அந்த ஊருக்கு ஏற்றாற்போல் கிறுக்கி வைத்துள்ளார்கள். வேதவியாசர் மகாபாரத கதையை விநாயகரிடம் எழுதச் சொல்லிகட்டளை இட்ட நாள்தான் அட்சயதிருதியை நாளாம்.
திருமாலின் அவதாரமான பரசுராமர் இன்றுதான் பிறந்தாராம் - இது கோங்கன் மற்றும் மங்களுரு போன்ற மேற்கு கருநாடகப் பகுதியில் உலவும் கதை; கோவாவும் கோங்கன் பகுதியும் பரசுராம சேத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன
குஜராத்திகளின் நம்பிக்கையின்படி அட்சய திருதியை ஆண்டின் மிகப் 'புனித மான நாள்களில் ஒன்றாகக் கருது கின்றனர். நாட்டில் 17 விழுக்காடு தங்க நகை வணிகம் அவர்கள் கையில்தான் உள்ளது. ஆகவே இது அவர்களுக்கு 'புனித' நாள் தானே!
இந்த நாளில் திருமாலை நெல் அரிசியுடன் வணங்கியும், உண்ணா நோன்பிருந்தும் வழிபடுவர்.
இந்நாளில் கங்கை நதியில் நீராடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது
பிரம்மனின் சாபத்தால் கையில் கபாலத்தை ஏந்தி ஊர் ஊராகத் திரிந்த சிவன் காசியில் அன்னபூரணியிடமிருந்து கையிலிருந்த கபாலம் நிரம்பும் அளவு உணவைப்பெற்றதும் அதோட்டாகுடிமகனைத் வடிவமைத்திடுவதுட்சய திருதியை அன்றுதான் - இது உபி., பீகார் பகுதிகளில் சொல்லும் கதை.
சொல்லும் கதை. பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் அட்சய என்று கூறி, பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதானாம்.
இது மயிலாப்பூர், மாம்பலம் பகுதி கதாகலாட்சேபத்தில் கூறும் கதை. வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்கவெகு நன்னாளாகக்கருதப்படுகிறதாம். பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர். குபேரனோ செல்வத்தின் அதிபதி என்கின்றனர்; இந்த நாளில் குபேரர்கூட விஷ்ணுவின் மனைவியும், செல்வத் திற்கான தெய்வமுமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது.
அதில் லட்சுமி உருவப் படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறதாம். ஒரு நாளுக்காக இத்தனைக் கதைகள் என்பதிலிருந்தே இதன் பித்தலாட்டம் புரியவில்லையா! இப்படி ஊருக்கு ஊர் ஏற்றாற்போல் கதைகளை எழுதி வைத்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு அட்சய திருதியை நாளில் 700 கிலோ தங்கம் விற்பனை ஆன நிலையில், 2012 ஆம் ஆண்டு அதன் விற்பனை 720 கிலோவாக அதிகரித்திருந்தது. 2013 இல் 1100 கிலோவும், 2014 ஆண்டு 2000 கிலோவும் தங்கம் விற்பனை யானது. 2015ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் அட்சயதிருதியை விற்பனை நடைபெற்றது.
முதல் நாளில் 1100 கிலோ, இரண்டாம் நாளில் 2,100 கிலோ என இரண்டு நாட்களில் மட்டும், 3,200 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு, 1000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது
கடன் வாங்கியும் இந்நாளில் தங்கம் வாங்கவேண்டுமாம். கடன் வாங்கத் தூண்டுவதற்கு ஒரு விழாவா? திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏன் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லுகிறார்கள் தெரியுமா?
தம்கல்யாணத்திற்காக வெங்கடாசலபதி குபேரனிடமிருந்து கடன் வாங்கினானாம், அதனை அடைப்பதற்குத்தான் திருப்பதி உண்டியலாம்.
திருப்பதி உண்டியலாம். பக்தியே ஒரு வியாபாரம்தான் என்ற நிலையில் வியா பாரிகள் இந்த மூடத்தனத்தை விட்டு விடுவார்களா? கடைசியாக ஒரு கேள்வி. கடந்த ஆண்டு இந்நாளில் கடன் வாங்கித் தங்கம் வாங்கியோர் வீடுகளில் தங்கம் குவிந்ததா?
No comments:
Post a Comment