செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 18, 2020

செய்தித் துளிகள்....

* 24 ஆயிரம் துரித பரிசோதனைக் கருவிகள் சீனாவில் இருந்து சென்னை வந்தன


*சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையிலிருந்து கரோனா நோயாளிகள் 30 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். .


காசி - புனித யாத்திரை சென்று வந்த 126 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


* தேனி, விருதுநகர், நெல்லை , தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு, மதுரையில் வெப்ப நிலை 104 டிகிரி .


*சமூக வலைத் தளத்தில் வதந்தி பரப்பிய மேற்கு வங்க மாநில பிஜே.பி.யைச் சேர்ந்த எம்.பி., சுபாஷ் சர்க்கார்மீது வழக்குப் பதிவு


*ஆப்பிரிக்காவில் கரோனாவால் 3 லட்சம் பேர் பலியாவார்கள் - இது அய்நா. பொருளாதார ஆணையம் கணிப்பு 


* சென்னையில் இதுவரை 84 தெருக்கள் மூடப்பட்டன


* இந்த முக்கியமான காலகட்டத்தில் கரோனா பரவலைத் தடுத்திட அலைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகளும், 'டேட்டா' பயன்பாட்டு வசதிகளும் அளித்திட தொலைப்பேசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என்று வழக்குரைஞர் மனோச்சார் பிரதாப் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.


*ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தினக் கூலி பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்ற நியாயமான கோரிக்கை எழுந்துள்ளது.


*ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.500 மதிப்புள்ள பொருள்களை அரசு வழங்கவேண்டும் என்று சென்னை வழக்குரைஞர் ஏ.பி.சூர்யபிரகாசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


*. சமூக இடைவெளியைப் பின்பற்றிடாத கடைகளை இழுத்து மூடி 'சீல்' வைக்குமாறு அரசு ஆணை.


*. ஞாயிற்றுக் கிழமைகளிலும் சமையல் எரிவாயு (சிலிண்டர்) விநியோகம் உண்டு.


*. . திருப்பூரில் ஆடை ஏற்றுமதி 30 விழுக்காடு சரிவு!


*. திருவண்ணாமலை யையடுத்த தண்டராம்பட்டு அருகே ஏராளமான வவ்வால்கள் உள்ளதால், அவற்றின்மூலம் கரோனா பரவும் என்று அஞ்சி, கால்நடைகளுக்கும் முகக்கவசம்.


*நாகப்பட்டினத்தை அடுத்த அய்வநல்லூர்வாழ் ஆதியன் மக்கள் (பூம் பூம் மாடுகளை வைத்து யாசகம் கேட்போர்) 'உயிர் பிச்சை போடுங்க' என்று கதறல்! ஊரடங்கு உத்தரவால் வங்கிகளில்


*ஊரடங்கு உத்தரவால் வங்கிகளில் கூட்டம் அதிகம். சென்னையில் கைப்பேசிமூலம்


*சென்னையில் கைப்பேசிமூலம் காய்கறி, பழங்கள் பெற்றிட தோட்டக் கலைத் துறை முன்வந்துள்ளது. தொடர்புக்கு 91766 47302, 99622 37233, 63805 68121 


*அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் - செனட்டுக்கும் கடுமையான மோதல். 


*மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கரோனா நிவாரண நிதியாக ரூ.1125 கோடி வழங்கியுள்ளார்; இதற்கு முன்பும் ரூ.700 கோடி அளித்த மனிதநேயர் - பகுத்தறிவுவாதி இவர்.


*மதுக்கடைகளை இரண்டு மணிநேரம் திறக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி


* உத்தரப்பிரதேசத்தில் அய்ந்து சிறைச்சாலைகளில் உள்ள 500 கைதிகள் - தங்களின் அன்றாட வேலைமூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ.2.3 லட்சத்தை கரோனா நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர் - என்னே மனிதநேயம்!


No comments:

Post a Comment