சீனாவிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 28, 2020

சீனாவிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவுறுத்தல்



புதுடில்லி, ஏப். 28- உலகம் முழு வதும் கரோனாவால் பாதிக் கப்படுவோரின் எண்ணிக்கை யும் உயிரிழப்போர் எண்ணிக் கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளை வெகுவாக பாதித்து வருகிறது. உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந் தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 94 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந் தோரின் எண்ணிக்கை 8 லட் சத்து 82ஆயிரத்து 552 ஆக வும் உயர்ந்துள்ளது.


இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகி றது. கரோனா பாதிப்பை விரைவில் கண்டறிய சீனா வில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவியை பல நாடுகள் வாங்கியுள்ளன. இந்தியாவும் சீனாவில் இருந்து வாங்கியது.


இதனிடையே ரேபிட் டெஸ்ட் தவறான முடிவு களை தருவதாக இராஜஸ் தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதை யடுத்து புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை கொண்டு இரண்டு நாட்க ளுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கேட்டுக்கொண்டது. மேலும், ரேபிட் டெஸ்ட் கிட்டை மீண்டும் பயன்படுத் துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.


இதன்பின்னர், மாநில அரசுகள் கரோனாவை கண் காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத் தலாம் எனவும் கரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம் எனவும்  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் விளக்கம் அளித்தது.


இந்நிலையில் வோன்ஃபோ நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன் படுத்த வேண்டாம் என  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.


 


No comments:

Post a Comment