செய்தித் துளிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 27, 2020

செய்தித் துளிகள்

* தொற்று நோயால் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதைத் தடுத்தால் 3 ஆண்டு சிறை - தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம்.


* முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் பிரதமர் இன்று ஆலோசனை.


* அட்சய திரிதியை நாளில் (26.4.2020) தங்கம் விற்பனை படுதோல்வி (கெடுதலிலும் ஒரு நல்லது).


* கிருட்டிணகிரி மாவட்டம் - தொற்று இல்லாத மாவட்டம். (ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஓசூர் தோழருக்குத் தொற்று இல்லை என்று நிரூபணம்).


* கரோனாவுக்குத் தடுப்பு கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் பெருமுயற்சி; நல்லது, அதேநேரத்தில் மதப் பிரிவினைவாத வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது யார்? என்ற வினாவை எழுப்பியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் சகரிகா கோஷ். (நல்ல கேள்விதானே!)


* இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ‘பிளேக்' நோய் தொற்றியபோது அய்தராபாத் நிஜாம் மன்னர் 32 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளித்தார்.


* தமிழ்நாட்டில் ஊரடங்கு; கைது எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரம்.


* சீனாவில் கடந்த ஒரு வார காலத்தில் உயிர்ப் பலி ஏதுமில்லை.


No comments:

Post a Comment