மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதப் போக்கை கைவிடுங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 28, 2020

மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதப் போக்கை கைவிடுங்கள்

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



சென்னை, ஏப். 28- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலை வர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-


சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு என, எவ் வித முன் தயாரிப்புகளுமின்றி, திடீ ரென யாரும் எதிர்பாராத நிலையில் அரசு அறிவித்தது, இதனால் பொது மக்கள் நான்கு நாட்களுக்கு என்ன செய்வது என்ற பதற்றத்திலும், அவ சரத்திலும் அத்தியாவசியப் பொருட் களை வாங்குவதற்காக கூட்டம் கூட் டமாக வெளியே வந்தனர். அதனால் எங்கும் நெரிசல் ஏற்பட்டு, இத்தனை நாளும் மக்கள் காத்து வந்த சமூக ஒழுங்கு பாதிக்கப்பட்டு, நோய்த் தொற்று பரவல் குறித்த சந்தேகம் அனைத்து தரப்பிலும் அதிகரித் துள்ளது என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.


பேரிடர் காலத்திலும்கூட, எடுத் தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சதி கார பாணியில், எந்த ஆலோசனை யையும் பொருட்படுத்தாமல், எல்லா வற்றையும் விளம்பரமாகக் கருதி, தன் பெயரை முன்னிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் மலிவான அரசியல் நோக்கத்தைதான் அவரது நடவ டிக்கை காட்டுகிறது. கடைகளில் பெருங்கூட்டம் கூடியதால், இந்த ஊரடங்கின் நோக்கமே சிதைந்து சின்னாபின்னமாகும் சூழல் உருவாகி விட்டது.


இதுகுறித்தெல்லாம் முறையாக ஆலோசித்து முடிவெடுத்து வெளிப் படையாக அறிவித்திருந்தால், மக்க ளும் சமூக ஒழுங்கைக் கடைப்பிடித்து தங்களுக்குத் தேவையான பொருள் களை எவ்வித நெரிசலுமின்றி, பொறு மையாக வாங்கிச் சென்றிருக்க முடி யும். பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில், அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்ற நடவடிக்கையால், நோய்த் தொற்று பரவல் குறித்த அய்யப்பாடும் பயமும் மேலும் அதிகரித்துள்ளது.


கரோனா தொற்று அறிகுறி களுடன், மூச்சுத் திணறல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் அனுமதிக் கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச் சையளிக்க வேண்டிய மருத்துவர் களுக்கு தற்காப்பு உடை அரசு தரப் பிலிருந்து தரப்படாததால், உடனடி யாக சிகிச்சையை தொடங்க முடியா மல், மூத்த மருத்துவர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்களின் கண்ணெதிரே அந்த இளைஞர், எந்த சிகிச்சையும் கிடைக் கப் பெறாமல் துடிதுடித்து இறந்து போனார் என்ற செய்தி வந்துள்ளது. அலட்சியத்தால் இப்பேரிடர் காலத் தில், மருத்துவத்துறைக்கான போதிய அடிப்படை வசதிகளின்றி ஓர் உயிரை பலியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.


தலைநகர் சென்னையின் முதன்மை மருத்துவமனையில் பணி யாற்றும் மருத்துவர்களின் நிலையே இத்தனை பரிதாபகரம் எனில், தமிழ கத்தின் கடைக்கோடியில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நிலையை கேட்கவே வேண்டாம்; அதை நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது. அவசர சிகிச்சை பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு மருத் துவர்களை தள்ளியது ஏன் என தமிழக அரசு, நாட்டு மக்களுக்கு பதில் சொல்லவேண்டும்.


இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தி யிலும், அர்ப்பணிப்போடு பணியாற் றும் சுகாதார ஊழியர்களை நெஞ்சாரப் பாராட்டுவதோடு, அவர்களை பாதுகாக்கும் கடமை தலையாயது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.


இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் பல மாநிலங் களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போதைய நோய்த் தொற்று சூழலில், அந்தந்த மாநில அரசுகளும் இராஜஸ்தானில் உள்ள தங்கள் மாணவர்களை பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதில் அக்கறை காட்டி வருகின் றன. அங்கு தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அ.தி.மு.க. அரசு உடனடியாக அந்த மாணவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான பாது காப்புடன் கூடிய பயணத்திற்கு ஏற் பாடு செய்திட வேண்டும் என வலி யுறுத்துகிறேன்.


பேரிடர் காலத்தில் பொதுமக்க ளின் நலன் காப்பதுதான் முக்கியமே தவிர, அதையே ஒரு வாய்ப்பாகக் கருதி, வெற்று விளம்பர அரசியல் செய்வது, இறுதியில் எந்தப் பயனை யும் தராது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில்கொண்டு, விளம்பர வெளிச்சத்திற்காக ஏங்கி, மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதப் போக்கை இப்போதாவது நிறுத்திக் கொண்டு, முன்யோசனை நிறைந்த விவேகத்துடன் விரைந்து செயல்படு மாறு அன்புடன் வலியுறுத்துகிறேன்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment