புதுடில்லி, ஏப்.21 டில்லியைச் சேர்ந்த கரோனா வைரஸ் பாதித்த நபர் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக குணமடைந்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த வகை யில், பிளாஸ்மா சிகிச்சை முறை யையும் மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் களிடம் இருந்து ரத்தத்தை தான மாக பெற்று, அதிலிருந்து பிளாஸ் மாவை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும் பட்சத்தில், கரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு ஆற்றல் ரத்தத்தில் உரு வாகி எளிதில் குணமடைய வாய்ப் புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒருவர் 400 மி.லி பிளாஸ்மாவை தானமாக வழங்கலாம் எனவும், அதைக் கொண்டு இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டில்லியில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்.,4ஆம் தேதி கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 49 வய துடைய நபருக்கு, தொற்று உறுதி யானது. காய்ச்சல், சுவாச பிரச் சினைகளுடன் சிகிச்சையில் இருந்து வந்தவரின் உடல்நிலை மோச மடைந்ததை அடுத்து ஏப்.,8இல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல்நிலையில் எந்தவித முன் னேற்றமும் ஏற்படாததால், ஏப்.,14இல் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சைக்கு பின், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு முறை சோதனை செய்ததில் எதிர்மறை முடிவுகள் வரவே, அந்த நபர் கரோனாவில் இருந்து முழுமையாக குண மடைந்துள்ளதாக மேக்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஆனாலும், இவருடன் அனுமதிக்கப்பட்டிருந்த இவரது 80 வயது தந்தைக்கும் பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ஆனால் அதற்கு முன்னதாகவே அவரது உடல் மிகவும் மோச மடைந்ததால் ஏப்.,15இல் அவர் இறந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment