பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சமூகப்பணித்துறை மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 28, 2020

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சமூகப்பணித்துறை மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி


வல்லம். ஏப். 28- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), சமூகப்பணித்துறை மற்றும் உன்னத் பாரத் அபியான் என்ற திட்டத்தின் கீழ்  தஞ்சை பகுதியில் மது போதைக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு மற்றும் அதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகி கொண்டிருக்கக்கூடிய நபர்க ளுக்காக ஆலோசனை வழங்கும் பொருட்டு இன்று முதல் எந்த நேரமும் தொலைபேசி மற்றும் அலைபேசியின் மூலம் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த ஊரடங்கு தமிழ்நாடு முழுவ தும் டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டு உள்ளது, இதனால் குடிக்கு அடிமையாகி உள்ள நபர்கள் தங்களுக்கு போதை வருவதற்கு என்று பல்வேறு வகைகளில் தங்களுக்கு போதை வருவதற்கு பல பொருட்களை பயன்படுத்தி  பானங் களை தயார் செய்து குடிக்கிறார்கள். இது அவர்களின் உயிரையே பறித்து விடுகின்றது மற்றும் ஆபத்தான நிலை களுக்கும் சென்றுவிடுகிறார்கள்.


மது போதைக்கு அடிமையாகி உள்ள வர்களுக்கு என்று சிகிச்சை வேண்டும் என்று காரணத்தினால் சமூகப்பணித் துறை தஞ்சாவூர்சிறீவிக்டோரிய குடி போதை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மய்யம் (செல் நம்பர் 9940803127, 89706 91020,  மற்றும் திருச்சி ஆத்மா மனநல மய்யம் (8012522100) அதன் கீழ் இயங்கும் மற்றொரு பிரிவாக தற்கொலை செய்து கொள்ள எண்ணம் உள்ளவர்களுக்கு  என்று தனிப்பட்ட முறையில்   24 மணி நேரமும் ஆலோசனைகள் வழங்க 98424 22121 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்


கரோனா தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வை பல்கலைக்கழகத்தில் இயங்கும் பெரியார் சமூக வானொலி பண்பலை 90.4 என்ற அலைவரிசையில் கொரரோனா தொற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பப்படுகின்றது.


குடிபோதைக்கு உள்ளானவர்களுக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற் றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) மாணவ ஆலோ சகர் திருமதி லில்லிபுஷ்பம் (94442158777) அவர்களையும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். இந்நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை சமூகப்பணித்துறை தலைவர் பேராசிரியர் அ.ஆனந்த் ஜெபாஸ்டின் ஒருங்கிணைத்தார்.


No comments:

Post a Comment