மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை : ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் அவசர சட்டம்
புதுடில்லி,ஏப்.23 கரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக் குதல் நடத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிப்பதற்கான அவசர சட்டத்தை கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் கரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவர் சைமன், வைரஸ் பாதிப்பால் பலியானார். அவருடைய உடலை புதைக்க விடாமல் மக்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் நடத்திய தாக்குதலில் ஆம்புலன்ஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டு, சுகாதார பணியாளர்களும் காயமடைந்தனர். இதுபோல் நாடு முழுவதும் மருத் துவர்கள், செவிலியர்கள், சுகாதார, தூய்மை பணியாளர்கள் மீது எச்சில் துப்புவது போன்ற அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு இந்திய மருத் துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், மக்களுக்காக போராடி வரும் மருத்துவர்களை மத்திய அரசும், மாநில அரசும் பாதுகாக்க வலியுறுத்தி, நாடு தழுவிய வெள்ளைப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் வீடியோ கான் பரன்சிங் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதார பணியாளர் களை பாதுகாக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டுமென மருத்துவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட் டது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் நேற்று சிறப்பு சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. சுகாதார ஊழியர்களுக்கு எதிரான தாக்குதல் இருந்தால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு பெருவாரியாக பரவும் தொற்றுநோய்கள் சட்டத் திருத்தத் திற்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் மீது நடத்தப் படும் வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்களை இந்த அரசு ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. மருத்துவர்கள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தங்கள் சுகாதாரப் பணியை செய்வதை இந்த அரசு உறுதி செய்யும்.
இதற்காக, கொள்ளை நோய் சட்டம் -1897இல் திருத்தம் செய்யும் விதமாக அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, மருத் துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவோர்மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படும்.
தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். படுகாயத்தை ஏற்படுத் தினால் 6 மாதம் முதல் 7 ஆண்டு சிறை தண் டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.
சுகாதார பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப் பிருப்பதால் அவர்கள் வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர்கள் நெருக்கடி தரும் சம்பவங்களும் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அப்படிப்பட்டவர்கள் மீதும் பிணையில் வெளி வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படும். மேலும், வன்முறையில் ஏற்படும் சேதங்களுக்கு வன்முறையாளர் களிடம் இருந்தே இழப்பீடு தொகை வசூலிக்கப்படும். இது, சந்தை விலையைக் காட்டிலும் 2 மடங்கு அதிக தொகையாக வசூலிக்கப்படும் என்றார். இந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு ஒப்புதல் தந்ததை அடுத்து உடனடியாக இது அமலுக்கு வந்துள்ளது. இதே போல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், ‘மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும். அவர்கள்மீது தாக்குதல் நடத்தும் வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற் காக உயர் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். அவர்கள் சுகாதார பணி யாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வன்முறை சம்ப வங்கள் நடந்தால் மாநில அரசுகள் உடனுக்குடன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்,’ என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment