ஏழைகளின் வங்கிக்கணக்கில் தலா ரூ.7,500 செலுத்த வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 22, 2020

ஏழைகளின் வங்கிக்கணக்கில் தலா ரூ.7,500 செலுத்த வேண்டும்


-மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு பரிந்துரை


புதுடில்லி , ஏப்.22, கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலை யில் , பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க மேனாள் பிரதமர் மன்மோகன்சிங்தலைமையில் ஒருகுழுவைகாங்கிரஸ்கட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.


அதில், மன்மோகன்சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். - கூட்டம் முடிவடைந்த பிறகு, மற்றொரு உறுப்பினரான மேனாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காணொலி காட்சி மூலம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புத்துயி ரூட்டுதல், தானியகொள்முதல், புலம்பெயர்தொழிலாளர்கள் விவகாரம் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதித்தோம்.


சிறு, குறு, நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தினர். ஏனென்றால், நாட்டில் ஏராள மான வேலைவாய்ப்பு அளிக்கக்கூடியது, இத்துறை ஆகும்.


ஆகவே, இத்துறைக்கு புத்துயிரூட்டுவதற்கான விரிவான திட்டத்தை காங்கிரஸ் வகுத்துள்ளது. ஓரிரு நாளில் அதை மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். சுமுகமான தானிய கொள்முதலை உறுதி செய்யவும், புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் சாதகமான பரிந்துரைகளை அளிக்குமாறு மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகியோர் கேட்டுக்கொண்டனர். - கரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், நேரடியாக வரவு வைக்கும் முறையில் ஏழைகளின் வங்கிக் கணக்கில் தலாரூ.7ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்த குழு பரிந்துரை செய்துள்ளது.


ஜன்தன் வங்கிக்கணக்குகள், அனைத்து ஓய்வூதிய கணக் குகள், பிரதமர்- கிசான் திட்ட கணக்குகள் ஆகியவற்றில் இப்பணத்தை செலுத்த வேண்டும். கருணையுள்ள, பொறுப் பான அரசாக இருந்தால், இந்த நிதிக்கு ஏற்பாடு செய்யும். - மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்ப்பதில் கவனம் செலுத்தியதால், கரோனா தடுப்பு பணிகளில் மத்திய அரசு தாமதம் செய்தது. இப்போதாவது, காங்கிரஸ்குழு அளிக்கும் சிபாரிசுகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம்.


மராட்டிய மாநிலம் பால்கார் மாவட்டத்தில், திருடர் என்ற சந்தேகத்தில் 3 பேர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கூட பா.ஜ.க. அரசியல் செய்துவருகிறது. இவ்வாறுஜெய்ராம் ரமேஷ் கூறினார். மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு பரிந்துரை


No comments:

Post a Comment