*மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளித்து கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்கலாம் என்று இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான பயிற்சியும் தொடங்கப்பட்டுவிட்டது.
*ஜிம்பாவேயில் ஒரு பக்கம் மலேரியா; இன்னொரு பக்கம் கரோனா என்றும் இரட்டைத் தாக்குதல்!
*இந்தியாவில் 14 கோடி பேர் வேலை இழப்பு!
*போதிய விலை கிடைக்காததால் விளாத்திகுளம் பகுதியில் பருத்தி செடிகள் அழிப்பு!
*பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கை அளிக்கிறது - டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தகவல்.
*கரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் 4 கோடி வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாதிப்பு - இது உலக வங்கி அறிவிப்பு
*கரோனாவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதற்காக ஆய்வில் சி.எஸ்.அய்.ஆர். எனப்படும் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் ஈடுபட்டுள்ளது.
*கரோனா தொற்றானது - தற்போது மனித உரிமை நெருக்கடியாக உருமாறி வருகிறது என அய்.நா. பொதுச் செயலாளர் கவலை.
*உலக சுகாதார நிறுவனத்துக்கு வழக்கமாக அளிக்கப்படும் நிதியை அமெரிக்க அதிபர் நிறுத்தியுள்ள நிலையில், சீனா வழக்கமாக அளித்துவரும் ரூ.152 கோடி நிதியைத் தவிர கூடுதலாக 228 கோடி ரூபாய் அளிக்க முன்வந்துள்ளது.
*பாகிஸ்தானில் கரோனா வைரஸ் கடந்த 5 நாள்களில் 40 விழுக்காடு அதிகரிப்பு,எதிர்கொள்ள எதிர்ப்புச் சக்தியை நாள்கள்தான்!
* முகக்கவசம், கையுறை, சமூக இடைவெளி இவற்றைக் கடைப்பிடிப்பதில் காவல்துறையினர் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று காவல்துறைத் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) வற்புறுத்துகிறார்.
*கரோனாவை ஒழிக்க, தஞ்சை திருக்காட்டுப்பள்ளி திவ்ய ஞானேஸ்வரி கோயிலின் பனை ஓலை வழிபாடாம்! (உருப்பட்ட மாதிரிதான்).
*சென்னை கொத்தவால்சாவடி மூடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment