ரேபிட் டெஸ்ட் கருவி விவகாரம் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 30, 2020

ரேபிட் டெஸ்ட் கருவி விவகாரம் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராகுல் காந்தி வலியுறுத்தல்


புதுடில்லி, ஏப். 30- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரைப்பதிவில் கூறியிருப்பதாவது:


கரோனா பேரிடருக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கும் போது, சிலர் அதை பயன் படுத்தி கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள். கரோனா பாதிப்பை கண்டறியும் ‘ரேபிட் டெஸ்ட்’ கருவிகளை மத்திய அரசுக்கு அதிக விலைக்கு விற் றுள்ளனர். இத்தகைய ஊழல் மனோபாவத்தை கண்டு ஒவ் வொருவரும் வெட்கப்படு கிறார்கள். அவர்களை நாடு மன்னிக்காது. அவர்கள்மீது பிரதமர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பா ளர் ரந்தீப் சுர்ஜேவாலா சுட் டுரைப்பதிவில் கூறியிருப்ப தாவது:


கரோனா ‘ரேபிட் டெஸ்ட்’  கருவியை ரூ.225-க்கு இறக்கு மதி செய்து, அதை மத்திய அரசுக்கு 600 ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதன்மூலம் 166 சதவீத லாபம் ஈட்டி உள் ளனர்.இதில் ஊழல் நடந்துள் ளது. வெட்கக்கேடான, மனி தத்தன்மையற்ற செயல். இதற்கு காரணமானவர்களை பிரதமர் மோடி கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.


No comments:

Post a Comment