ந்தியாவில் இந்துத்துவவாதிகள் இஸ்லாமி யர்களைச் சீண்டும் வேலையைப் பிழைக்கப் போன இடத்திலும் அரங்கேற்றியதால் ஏற்பட்டுள்ள விளைவு - ஆபத்தில் போய் முடிந்திருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க இணைய இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அது இதோ:
வெறுப்புப் பேச்சை பேசுபவர்கள் சவுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்
-ஹப்போஸ்ட் இதழ்
(அமெரிக்காவிலிருந்து வரும் ஹப்போஸ்ட் (Huffpost India) என்ற இணைய இதழ் 21.4.2020 அன்று ஒரு செய்திக் கட்டுரையை (UAE Princess Tweets Out Law On Hate Speech Amid Backlash Over Islamophobic Posts In India) வெளியிட்டிருக்கிறது. மெரில் செபாஸ்டியன் (Meryl Sebastian) என்ற பத்திரி கையாளர் எழுதியுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது)...
சமூக வலைத்தளங்களில் இந்தியாவில் இருந்து வந்த ஒருவர் கோவிட் வைரஸ் தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். வெறுப்பை உமிழும் பேச்சுகள் (hate speech) சவுதி நாட்டு சட்டப்படி தண் டிக்கக் கூடிய குற்றமாகும். வெறுப்பு பேச்சு குறித்து அந்த நாட்டுச் சட்டம் என்ன சொல்கிறது என்பதை தனது டுவிட்டரில் சவுதி நாட்டு அரச குடும்பத்தைச் சார்ந்த இளவரசி ஹெண்ட் அய் ஹாசிமி (Hend Al Qassimi) போட்டிருந்தார். (அந்தக் குற்றத்திற்காக அய்ந்து இலட்சம் திரகாம் முதல் பத்து இலட்சம் திரகாம் வரை (ஒரு திரகாம் என்பது கிட்டத்தட்ட இரு பது ரூபாய்) தண்டணைக் கட்டணம் செலுத்த வேண் டும் சிறைத் தண்டையும் உண்டு). சவுதியில் பணிபுரி பவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த வெறுப்பான பேச்சுகளின் படத்தை (screen shots) எடுத்து, கடந்த வாரம் தனது டுவிட்டரில் அந்த நாட்டு இளவரசி ஹாசிமி போட்டிருந்தார். இப்படி வெளிப் படையாக இனவாதத்தைப் (openly racist) பேசும், பாகுபாட்டை கடைபிடிப்பவர்கள் (discriminatory) கண்டிக்கப்படுவதோடு, சவுதியை விட்டு வெளியேற் றப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அந்தப் பதிவைப் போட்டவர் இந்தியாவைச் சேர்ந்த வர், துபாயில் பணிபுரிகிறார். இளவரசியின் இந்தப் பதிவிற்குப் பிறகு, அந்தப் பதிவை நீக்கி விட்டார், தனது டுவிட்டர் கணக்கையும் செயலிழக்கச் செய்துவிட்டார். ‘‘இந்தியர்கள் எங்களுக்கு நண்பர்கள்தான். உங்கள் முரட்டுத்தனத்தை (rudeness) ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம்பளம் தரப்படுகிறது, யாரும் இலவசமாகப் பணியாற்றவில்லை; உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான உணவு இந்த மண்ணிலிருந்துதான் உங்களுக்குக் கிடைக்கிறது. ஆனால், நீங்கள் ஏளனம் செய்வதும், வெறுப்போடு இருப்பதும் கவனிக்கப்படாமல் போகாது'' என்று தனது டுவிட்டரில் அவர் கருத்து தெரிவித்து இருந்தார். வெறுப்பான பேச்சை பேசுவபவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகளின் விபரம் குறித்து அவர் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். வெளிவந்திருந்த செய்திகளையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
திங்கள் கிழமை அன்று என்டிடிவி -க்கு கொடுத்த பேட்டியில் காயப்படுத்தும் டிவிட்டர்கள் குறித்து அவர் பேசியிருந்தார்.
‘‘நடந்து கொண்டிருப்பதை அவர் விரும்பவில்லை'' என்று சொன்னார். டிவிட்டரில் வெளிவந்த சிலரின் கருத்துகள் அனைத்தும் ஒட்டுமொத்த இந்தியர்களின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ‘‘சவுதி நாடானாது அதிக வியாபாரம் செய்யும் அய்ந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த நட்பை நாங்கள் மறுக்கவில்லை'' என்றும் அவர் சொன்னார்.
‘‘உலகமே ஒன்றுசேர்ந்து கோவிட் நோய்க்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த வெறுப்பு நிற்க வேண்டும்'' என்று அவர் பின்பு ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.
மார்ச் மாதம் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் ஜமாத் மாநாடுபற்றி முஸ்லிம்களை குறிவைத்து, இஸ்லாமிய வெறுப்பை உமிழும் பதிவுகளை அங்கு பணியாற்று பவர் போட்டிருந்தார். இளவரசி ஹாசிமி, தப்ளிக் மாநாடு நடந்த அதே சமயத்தில் இந்தியா முழுதும் நடைபெற்றிருந்த மற்ற மதங்களின் கூட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டு இருந்தார். ‘‘எல்லா கூட்டங் களுமே கரோனா வைரசை பரப்புகின்றன'' என்று அவர் சனியன்று தெரிவித்து இருந்தார். இஸ்லாமிய வெறுப்பைக் கண்டிக்கும் பல அரபு ஆளுமைகளில் இவரும் ஒருவர் என குறிப்பிடத்தக்கது.
பாஜகவைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சூரியா தேஜஸ்வியின் பதிவையும் இவர் கண்டித்து இருந்தார். (தேஜஸ்வி சமீபத்தில் அந்தப் பதிவை நீக்கியிருந்தார்). மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்த பல அறிவாளர்கள் இந்தியாவில், முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஞாயிறு அன்று இஸ்லாமிய கூட்டுறவு அமைப் பினால் (Organization of Islamic Cooperation) அமைக்கப்பட்ட, சுயேச்சையான நிரந்தர மனித உரிமை ஆணையமானது (Independent Permanent Human Rights Commission (IPHRC) ‘‘இந்தியாவில் வளர்ந்து வரும் இஸ்லாமியோ போபியாவை தடுக்கவும், இங்குள்ள பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தேவையான அவசர நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும். பன்னாட்டு மனித உரிமைகளைக் காக்க வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது'' என கேட்டுக் கொண்டது. திங்கள் அன்று சவுதியில் உள்ள இந்தி யாவிற்கான தூதர், இந்திய பிரதமர் மோடி வெளி யிட்டிருந்த டிவிட்டரை போட்டிருந்தார்.
‘‘பாகுபாடு (discrimination) என்பது நமது அற உணர்வுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் முரணானது. சவுதியில் (UAE) வாழும் இந்தியர்கள் இதனை நினைவில் கொள்ள வேண்டும்''
- பீட்டர் துரைராஜ்
நன்றி ஜின்.
https://www.huffingtonpost.in/entry/uae princess-hate speech law-islamophobicposts-in-india in 5e9e7a02c5b6b2e5b83741df
=====================================================================================
‘‘தினமலர் என்ன கூறுகிறது!''
‘தினமலரில்' (22.4.2020, பக்கம் 15) வெளிவந்த செய்தி இதோ:
முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து கூடாது அரபு நாடுகளுக்கான தூதர் வேண்டுகோள்
துபாய், ஏப். 22 'வைரஸ் தொற்று பரவலுக்கு, இஸ்லாமியர்களை குறை கூறி, சமூகவலை தளங்களில் பதிவிடுவது, தார்மீக ரீதியில் தவறு, இதை, அய்க்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் புலம் பெயர்ந்த இந்தி யர்கள் தவிர்க்க வேண்டும் என, அய்க்கிய அரபு எமி ரேட்சுக்கான இந்திய தூதர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
அதிருப்தி
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா உட்பட பலர், கரோனா வைரஸ் தொற்றுக்கு, முஸ்லிம்களின் அலட்சியமே காரணம் என்பதை போன்ற பதிவுகளை, சமூகவலை தளங்களில் பதிவிட்டனர்.
மேலும், அய்க்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும். புலம் பெயர்ந்த இந்தியர்கள். முஸ்லிம் மக்களுக்கு எதிரான இதுபோன்ற விமர்சனங்களை, முன் வைத்து வருகின்றனர்,
இது, அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
‘இனவெறியை தூண்டுவதைப் போன்ற பதிவுகளை இடுபவர்கள், அரபு நாடுகளில் இருந்து வெளியேற்றப் படுவர் என, அய்க்கிய அரபு எமிரேட்சின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி ஹெண்ட் அல் குவாசிமி, சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.
கண்டனம்
பல்வேறு இஸ்லாமிய தலைவர்களும், இதுபோன்ற பாரபட்சமான கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
இந்நிலையில், அய்க்கிய அரபு எமிரேட்சுக்கான இந்திய தூதர், பவன் கபூர், வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:
‘கரோனா வைரஸ், இனம், மதம், நிறம், ஜாதி, மொழி மற்றும் எல்லை பார்த்து தாக்குவதில்லை, யாருக்கு வேண்டுமானாலும் தொற்று வரலாம்.
எனவே, அடிப்படை ஒற்றுமையும், சகோதரத்து வமுமே. இந்த நேரத்தில் நமக்கு தேவை' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாரபட்சமான கருத்துகளைப் பகிர்வது. நமது தார்மீக உணர்வு மற்றும் சட்ட திட்டங்களுக்கு எதிரான செயலாகும். அய்க்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்தியர்கள், எப்போதும் அதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் கருத்து
இந்தச் செய்திகளைத் தொடர்ந்து பிரதமரின் கருத்து கவனிக்கத்தக்கது. கோவிட்-19 இனம், நிறம், ஜாதி, மொழி, எல்லை பார்த்துத் தொற்றுவதில்லை. ஒற்றுமை, சகோதரத்துவம் நாம் பொறுப்பானவர்கள் என்பதற்கு இதுதான் அடையாளம் என்று பதிவிட் டுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகப்பிரசங்கித்தனமாக எங்கும் அரட்டை அடிக்கும் இருவர் தெரிவித்த கருத்துகளும் இதோ:
‘‘தப்ளிக் ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்த பலருக்குத் தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவியதை அறிவோம். ஆனால், சிகிச்சைக்குப் பின் அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் மிகப்பெரிய உதவியை நாம் அறிவோமா?''
- நாராயணன் திருப்பதி
‘‘கொடிய கரோனா தொற்றில் இருந்து மீள் வதற்குப் பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டுவரும் நிலையில், பிளாஸ்மா ரத்ததானம் செய்ய முன்வந்திருக்கும் இஸ் லாமிய மக்களைப் பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். இதுவே மத ஒற்றுமை.''
- எஸ்.வி.சேகர், பி.டி.அய். நியூஸ்
சுருதி பேதத்திற்குக் காரணம் புரிகிறதா?
உலகில் பல நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி நடை பெறுவதும்- அங்கெல்லாம் இந்தியர்கள் பணியாற்று வதும் தெரிந்ததே!
இந்த நல்லிணக்கத்தை இவர்கள் தொடர வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு!
-- மின்சாரம்
No comments:
Post a Comment