தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்
சென்னை,ஏப்.20, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப் பதாவது:-
முதல்-அமைச்சர் தனது உரையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை எதற் காகக்கூட்ட வேண்டும்? இவர்களி டம் ஆலோசனை பெறுவதற்கு இவர்கள் என்ன மருத்துவர்களா? தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக அ.தி.மு.க. ஆட்சி மீது நாள் தோறும் குற்றம் குறை கூறி வரு கிறார்கள்" என்று ஆத்திரம் பொங்க கூறி இருக்கிறார்.
இந்தியாவிலேயே கரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மாநிலங் களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசிடமிருந்து நிதி உதவி பெறுவதில் 10ஆவது இடத் துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே போல விரைவு சோதனைக் கருவிகள் பெறுவதில் மத்திய அரசு கொள் முதல் செய்த 5 லட்சம் கருவிகளில் தமிழகத்திற்கு 12 ஆயிரம் சோதனை கருவிகள்தான் வழங்கப்படுகின்றன என முதல்-அமைச்சர் கூறுகிறார். நிதி ஒதுக்கீடு செய்வதிலும், சோதனைக் கருவிகள் வழங்குவதிலும் மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தை வஞ்சித்து பாரபட்சமாக நடத்து வதை தட்டிக்கேட்க துணிவில்லை? அ.தி.மு.க. அமைச்சர்களை அடக்கி ஒடுக்கி கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்வதில் வெற்றி பெறலாம். ஆனால் தமிழக எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்கி விடலாம் என்ற கனவு பகல் கனவாகத் தான் முடியும். அத்தகைய மக்கள் விரோத அணுகு முறையை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மக்கள் ஆதரவோடு முறியடித்து காட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment