கடவுள் எடுத்த கொரோனா அவகாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 25, 2020

கடவுள் எடுத்த கொரோனா அவகாரம்!


கடவுள் கல்கி அவதாரம் எடுப்பதற்கு பதிலாக கொரோனா அவதாரம் எடுத்துட்டார்" என்று ஒரு மருத்துவர் சொல்லலாமா? என்று பலரும் கேட்டார்கள். மருத்துவர்கள் யதார்த்த வாழ்வில் நாம் சந்திக்கும் மற்ற மனிதர்கள் போலத்தான். அவர்களுக்குள்ளும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சிலர் அறம் சார்ந்தவர்கள், சிலர் அறம்னா கிலோ எவ்வளவு எனும் அளவில் இருப்பவர்கள். சிலர் மதப் பற்றாளர்கள், சிலர் பற்றற்றவர்கள். சிலர் நிஜ அறிவாளிகள், சிலர் வெறும் புத்தகப் புழுக்கள்.


நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களில் என்னென்ன demographic profileலும் psychological profileலும் உண்டோ , அது அப்படியே “மருத்துவர்" எனும் உட்பிரிவிலும் பிரதிபலிக்கும். மருத்துவர்களில் ஜாதி வெறியர் உண்டு; ஓவர் பக்திமான்கள் உண்டு; தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்தவர் உண்டு அவ்வளவு ஏன்? ஆர்.எஸ்.எஸ் எனும் ஸ்மார்த்த மேலாதிக்க அமைப்பை உருவாக்கிய டாக்டர் ஹெட்கேவர், “இங்லிஷ் மெடிசன்” படித்த ஒரு மருத்துவர் தான்! அதே படிப்பை படித்த டாக்டர் நடேசனுக்கும், டாக்டர் டி.எம்.நாயருக்கும் 'சமூக நீதி' பெரிய கொள்கையாக இருந்தது! ஆக இயற்கையில் எப்போதும் போல, வேறுபாடுகள் (variations) இருக்கும். எது நம் survivalலுக்கு fit என்று நாம் தான் தேர்வு செய்தாக வேண்டும்.


இந்த "கொரோனா=கடவுள் அவதாரம்” என்கிற மீமுக்கு வருவோம். கொரோனா வைரஸை மட்டும் கடவுள் அவதாரம் என்றால், அப்ப மற்ற வைரஸெல்லாம் என்ன தொக்கா? சர்வம் பிரம்ம மயம் தானே? கொரோனா கடவுள் அவதாரம் என்று நாமென்ன அதற்கு பூஜை அறையில் ஓர் இடமா கொடுக்க முடியும்? இது மாதிரி நிலையிலாவது நாம் கொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்தி, பிழைக்கத் தக்கன யோசிக்கவில்லை என்றால், நமக்கு இவ்வளவு பெரிய மண்டையும், அதற்குள் இவ்வளவு பெரிய மூளையும் இருந்து என்ன பயன்?


"உன் கடவுள விட உன் சாஸ்திரத்தை விட உன் முன்னோர விட உன் வெங்காயம் வௌக்குமாத்தை விட உன் அறிவு பெரிசு அத (செத்த யூஸ் பண்ணி ) சிந்தி!”


- உளவியல் மருத்துவர் ஷாலினி


No comments:

Post a Comment