கடலூர்,ஏப்.28, 'கரோனா' காரணமாக தனி மனித இடைவெளியை கடைபிடித்து அவரவர் வீட்டுக்குள்ளேயே முடக்கப் பட்டுள்ள நிலையில் இயக்க நிர்வாகி களுக்கு, தோழர்களுக்கும் செல்பேசி வழியே தொடர்பினை ஏற்படுத்தி நலம் நாடினாலும் முகத்துக்கு முகம் பார்த்து பேசினால் கூடுதல் சிறப்பு என்பதை கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலில், கடலூர் மாவட்ட கழக முன்னணி செயல் வீரர்களின் கலந்துரையாடல் கூட்டம் காணொலி காட்சி வழியே 23.4.2020 அன்று முற்பகல் 11 மணி முதல் ஒருங்கிணைக்கப்பட்டது.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வழி காட்டுதல் உரை வழங்கினார்கள். எப் பொழுதும் கட்டுப்பாடு காப்பதை கவச மாகக் கொண்டிருக்கும் கழகத் தோழர்கள் குடும்பத்தினரோடு இருக்க கிடைத்த நல்வாய்ப்பு ஒரு பக்கம் மரண பயத்தை கரோனா ஏற்படுத்தினாலும் மருத்துவ உலகம் சொல்லக்கூடிய வழியில் தனி மனித இடைவெளி பேணி கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால் பயமில்லை என்பதையும், தமிழர் தலைவரின் அவாவையும், செயல் பாட்டு செய்தியையும் கழகத் துணைத் தலைவர் எடுத்துரைத்தார்.
நூல்கள் வாசிப்பின் சிறப்பு குறித்து - பயன்பாடு குறித்துப் பேசி தினந்தோறும் 1 நூல் என்றபடி படிக்கத் தொடங்குவோம். தமிழர் தலைவர் அறிக்கையின்படி, 50% தள்ளுபடி விலையில் இயக்க நூல்கள் வாங்கிப் பயன் பெறுவோம். ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கிற படிக்காத நூல் களையும் வாசித்திடுவோம் என பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் பேசினார். தோழர்கள் ஒருவரையொருவர் நலம் நாடி விசாரித்துக் கொண்டனர்.
கடலூர் மண்டலத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் சொ. தண்டபாணி, மாவட்டச் செயலாளர் தென்.சிவக்குமார், அமைப்பாளர் சி.மணிவேல், மண்டல மகளிரணிச் செயலாளர் ரமா பிரபா, மண்டல இளைஞரணிச் செயலாளர் நா. பஞ்சமூர்த்தி, மாவட்ட மகளிரணித் தலைவர் முனியம்மாள், மாவட்ட இளை ஞரணித் தலைவர் உதயசங்கர், இந்திரா நகர் ந. கனகராசு, ஆடூர் அகரம் தா.கனகராசு, வடலூர் இரா. குணசேகரன், கோ. இந்திரசித், இரா. திராவிடரவி ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment