சென்னை ஏப். 27- இந்திய விதை நிறுவனக் கூட்டமைப்பு, அதன் உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு விதை விநி யோக வழிகளை பராமரிக்கும் முயற்சிகளில் முன்னணியில் உள்ளது.
விதைத் தொழிலின் தேவை களைப் பிரதிநிதித்துவப்படுத் துவதற்கும், காரீப் பருவத் திற்குத் தேவையான விதை களை பதப்படுத்துதல், பேக் கிங் செய்தல் மற்றும் கொண்டு செல்வதற்கும் தேவையான கொள்கை ஆதரவைப் பெறு வதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் ஆக்கபூர்வமாக ஈடுபட்டு வருகிறது.
அரசாங்கங்களின் விரை வான கொள்கை ஆதரவின் உதவியுடன், உறுப்பினர்கள் வரவிருக்கும் நடவு பருவத் திற்கு விதைகளுக்கு பற்றாக் குறை இருக்காது என்பதில் உறுதியாக உள்ளனர்.
கோவிட்-19 மற்றும் சமூகப் பொறுப்புக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை ஒரு படி மேலே கொண்டு சென்று உறுப்பி னர்கள் இப்போது பிஎம் கேர்ஸ் ஃபண்ட், முதலமைச் சர் நிவாரண நிதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உணவு விநியோகம் மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் போன்ற பிற நடவடிக்கை களுக்கு ரூ.9 கோடிக்கு மேல் நன்கொடைகளை வழங்கு வதாக உறுதியளித்துள்ளனர். இந்த மனிதாபிமான உதவி சுகாதார உதவி கட்டுப்பாட்டு மண்டலங்களில் சுத்திகரிப்பு, சமூகங்களுக்கு உணவளித்தல் மற்றும் நோய்க்கு சிகிச்சைய ளித்தல் போன்ற நடவடிக்கை களை உயர்த்தும்.
உறுப்பினர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகா ராஷ்டிரா மற்றும் கர்நாடகா வின் முதலமைச்சர் நிவாரண நிதிகளுக்கு ரூ .2.44 கோடியை யும் கேர்ஸ் ஃபண்ட்க்கு
ரூ .1.97 கோடியையும், நன்கொ டையாக அளித்துள்ளனர்.
மேலும் உறுப்பினர்கள் மஹிகோ, ராசி, சின்கெண்டா, கிரிஸ்டல் மற்றும் கோர்டேவா ஆகியோர் கோவிட் -19 நிவா ரண நடவடிக்கைகளுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கியுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment