பன்னாட்டுப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 14 லட்சம் கோடி டாலர் நிதி: அய்எம்எப் விடுவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 19, 2020

பன்னாட்டுப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 14 லட்சம் கோடி டாலர் நிதி: அய்எம்எப் விடுவிப்பு


வாஷிங்டன், ஏப்.19 கரோனா வைரஸால் உலக நாடுகள் முடங்கியுள்ள நிலை யில், பொருளாதார நெருக்கடி தவிர்க்கமுடியாதது. இதை சமாளிக்க உலகநாடுகள் அனைத்தும் 14 லட்சம் கோடி டாலர் அளவுக்கு மானியஉதவி மற்றும் பிற சலுகைகளுக்காக விடு வித்துள்ளது என்று பன்னாட்டு செலாவணி நிதியம் (அய்எம்எப்) தெரிவித்துள்ளது.


கரோனா பரவலை முற்றிலும் தடுத்துவிட்டதாக பன்னாட்டு சமூ கம் அறிவிப்பு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் மிக அருகில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது என்று அய்எம்எப் நிதிக் குழு தலைவர் லெஸட்ஜா கயன்யாகோ தெரிவித் துள்ளார்.


அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகள் இதுவரை நிதிப்புழக்கத்தை அதிகரிக்கவும், பல்வேறு சலுகை களுக்காகவும் விடுவித்த தொகை 8 லட்சம் கோடி டாலர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பன்னாட்டு அளவில் ஏற்பட் டுள்ள நிச்சயமற்ற சூழல் நமது மக் களை வெகுவாகப் பாதித்துள்ளது. பெரும்பாலான நாடுகள் இப்போது சுகாதாரப் பணிகள் மற்றும் பாதிக் கப்பட்ட நோயாளிகள், வேலையிழந்த ஊழியர்கள், முடங்கியுள்ள தொழில்களைக் காக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளன. தற் போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் அதிக பாதிப்புக்குள்ளாகும் ஏழை நாடுகளுக்கு உதவ அய்எம்எப் உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த மாத இறுதிக்குள் 50 ஏழை நாடுகளுக்குத் தேவையான உதவி களை அய்எம்எப் வழங்கும் என்று அதன் மேலாண் இயக்குநர் கிறிஸ்டி லினா ஜியார்ஜிவா தெரிவித்தார்.


பேரழிவுத் தடுப்பு மற்றும் நிவா ரண நிதிக்கு இங்கிலாந்து, ஜப்பான், சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி உள் ளிட்ட நாடுகள் உதவி செய்துள்ளன. மேலும் வறுமை ஒழிப்புக்கு 1,700 கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.


வர்த்தக சர்ச்சை, நாடுகளிடையே கொள்கை வேறுபாடு, அரசியல் பதற்ற சூழல் ஆகியவை காரணமாக பன்னாட்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகவும் சிக்கலானதாக இருந்த சூழலில் தற்போது கரோனா வைரஸ் பரவல் தொற்றுஇதை மேலும் மோசமாக பாதித்துள்ளது என்று ஜியோர்ஜிவா குறிப்பிட்டார். இதன் காரணமாக2020ஆம் ஆண் டில் மிக மோசமான பொருளாதார தேக்க நிலை உருவாவது தவிர்க்க முடியாத ஒன்று என்று அவர் குறிப் பிட்டார்.


சில உறுதியான நடவடிக்கை களையும், கட்டுப்பாடுகளையும் சர்வ தேச சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய சூழலை கரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்திவிட்டது. இதிலி ருந்து மீள்வதோடு பொருளாதார நெருக்குதலில் இருந்தும் நாடுகள் மீண்டு வர வேண்டியது கட்டாய மாகும் என்று அவர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment